காஸ்ட் ஆஃப் டிலே கால்குலேட்டர்
முதலீடுகளைத் தாமதமாகச் செய்ய நினைக்கிறீர்களா?
நீங்கள் முடிவுசெய்வதற்கு முன்பு உங்களுக்குக் கிடைக்கும் ரிட்டர்ன்களில் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிடுங்கள்.
இன்றே முதலீடு செய்க |
பிறகு முதலீடு செய்யலாம் |
|
---|---|---|
வருடங்கள் | வருடங்கள் | |
₹
|
₹
|
|
% |
||
SIPமுடிவடையும் வயது | வருடங்கள் | வருடங்கள் |
முதலீடு செய்த மொத்த ஆண்டுகள் | 10 வருடங்கள் | 5 வருடங்கள் |
முதலீடு செய்த மொத்தத் தொகை | ₹ 1.20 இலட்சம் | ₹ 60,000 |
உங்கள் முதலீட்டின் இறுதித் தொகை | ₹ 2.05 இலட்சம் | ₹ 77,437 |
வெல்த் கிரியேஷன் | ₹ 84,845 | ₹ 17,437 |
தாமதத்தால் ஏற்படும் இழப்பு |
₹ 1.27 இலட்சம்
|
இன்றே முதலீடு செய்க |
பிறகு முதலீடு செய்யலாம் |
|
---|---|---|
வருடங்கள் | வருடங்கள் | |
₹
|
₹
|
|
% |
||
வித்ட்ராயல் செய்யப்படும் வயது | வருடங்கள் | வருடங்கள் |
முதலீடு செய்த மொத்த ஆண்டுகள் | 10 வருடங்கள் | 5 வருடங்கள் |
முதலீடு செய்த மொத்தத் தொகை | ₹ 1 இலட்சம் | ₹ 1 இலட்சம் |
உங்கள் முதலீட்டின் இறுதித் தொகை | ₹ 2.59 இலட்சம் | ₹ 1.61 இலட்சம் |
வெல்த் கிரியேஷன் | ₹ 1.59 இலட்சம் | ₹ 61,051 |
தாமதத்தால் ஏற்படும் இழப்பு |
₹ 98,323
|
பொறுப்புத்துறப்பு:
கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.
இந்தக் கணக்கீடுகள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, உண்மையான ரிட்டர்ன் மதிப்புகளைக் காட்டவில்லை.
மியூச்சுவல் ஃபண்டில் நிலையான ரிட்டர்ன் விகிதம் இல்லை, ரிட்டர்ன் விகிதத்தைக் கணிக்க முடியாது. *இங்கே காட்டப்பட்ட மதிப்பில் பணவீக்கத்தின் தாக்கங்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை
காஸ்ட் ஆஃப் டிலே என்றால் என்ன?
காஸ்ட் ஆஃப் டிலே என்பது பல வருடங்களாக முதலீட்டைத் தள்ளிப்போடுவதால் தேவைப்படும் தொகை ஆகும்.
காஸ்ட் ஆஃப் டிலே கால்குலேட்டர் என்றால் என்ன?
குறிப்பிட்ட காலம் வரை உங்கள் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட்டைத் தாமதப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு காஸ்ட் ஆஃப் டிலே கால்குலேட்டர் உதவுகிறது. நீங்கள் தாமதமாக முதலீடு செய்ய ஆரம்பித்தால் உங்கள் இலக்கை அடையத் தேவையான கூடுதல் பண மதிப்பைக் கண்டறிய இது உதவுகிறது.
சிறிதுகாலம் தாமதித்தாலே நீண்டகால முதலீடுகளைப் பெரிதாகப் பாதிக்கும், அதனால் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற உடனே முதலீடு செய்வது அவசியம்.
முதலீடுகளைச் செய்ய மக்கள் தாமதப்படுத்துவதற்கான காரணங்கள் என்னென்ன?
முதலீடுகள் செய்வதைத் தாமதப்படுத்தும் முக்கியக் காரணிகள்:
- நிதி பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லாதது
- தெளிவான இலக்குகள் மற்றும் திட்டமிடல் இல்லாதது
- ஒத்திப் போடுதல்
- மோசமான பட்ஜெட் பழக்கங்கள்
- ரிஸ்க் எடுக்கப் பயம்
முதலீடுகளைத் தாமதப்படுத்துவதால் ஏற்படும் குறிப்பிடத்தக்க விளைவுகள்:
- சந்தை சுமாராகச் செயல்படும்போது நீண்டகால இலக்குகளுக்குப் போதிய நிதியின்மை
- உங்கள் பணத்தின் வாங்கும் திறனை குறைக்கும்
- கூட்டுவட்டியின் ஆற்றலைத் தவறவிடுதல்
காஸ்ட் ஆஃப் டிலே கால்குலேட்டரை எப்போது நீங்கள் பயன்படுத்த வேண்டும்?
முதலீடு செய்வதைத் தள்ளிப்போடும்போது காஸ்ட் ஆஃப் டிலே கால்குலேட்டரைப் பயன்படுத்துங்கள். தாமதமான முதலீட்டிற்கும் தேவையான முதலீட்டுத் தொகைக்கும் உள்ள வேறுபாட்டை மதிப்பிட இது உதவுகிறது, இதனால் உடனே முதலீடு செய்வதற்கும் தாமதமாக முதலீடு செய்வதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை ஒப்பீட்டுப் பார்ப்பதற்கும், கிடைக்கும் மதிப்புகளை வைத்து சரியான முடிவுகளை எடுப்பதற்கும் உதவும்.
காஸ்ட் ஆஃப் டிலே கால்குலேட்டரைப் பயன்படுத்துவதன் நன்மைகள்
- நேரம் சார்ந்த வாய்ப்புகளை மதிப்பிடுதல்: உடனே முதலீடு செய்வது அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தாமதமாக முதலீடு செய்வதால் பொருளாதார ரீதியில் பலனளிக்குமா என்பதைத் தீர்மானிக்கலாம்.
- நீண்டகால வளர்ச்சியைப் பகுப்பாய்வு செய்தல்: சீரான முதலீடுகளைத் தள்ளிப்போடுவதால் வளர்ச்சி மற்றும் கூட்டுவட்டியின் ஆற்றல்களின் சாத்தியமான இழப்புகளைப் பார்க்கலாம்.
- முதலீட்டு விருப்பங்களை ஒப்பிடுதல்: பல்வேறு காலகட்டங்கள் அல்லது சாத்தியமான ரிட்டர்ன்கள் மூலம் பல்வேறு வாய்ப்புகளில் முதலீடுகளைத் தாமதமாகச் செய்வதால் ஏற்படும் பாதிப்புகளை அளவிட்டு ஒப்பிடலாம்.
காஸ்ட் ஆஃப் டிலே கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?
ரிட்டர்ன்களில் சந்தை ஏற்ற இறக்கங்கள் அல்லது பிற வெளிப்புறத் தாக்கங்களைக் கணக்கில் எடுக்காமல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சூத்திரத்தின் அடிப்படையில் இந்தக் கால்குலேட்டர் செயல்படுகிறது.
பொதுவான கேள்விகள்
கே.1. முதலீடு செய்வதற்கான முடிவுகளை எடுக்க இன்வெஸ்ட்மென்ட் டிலே காஸ்ட் கால்குலேட்டர் எப்படி உதவும்?
பதில்: முதலீடுகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படும் பாதிப்பைக் காட்டுவதால் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதில் இன்வெஸ்ட்மென்ட் டிலே கால்குலேட்டர் உதவுகிறது. முதலீடு செய்வதை ஆரம்பித்து உங்கள் நிதி இலக்குகளை நோக்கிப் பயணிக்க போதுமான காலத்தைத் தீர்மானிக்க உங்களுக்கு இது உதவும்.
கே.2. தாமதமாக முதலீடு செய்வதால் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிடுவது ஏன் அவசியம்?
பதில்: தாமதமாக முதலீடு செய்வதால் ஏற்படும் பாதிப்பைக் கணக்கிடுவதால் விரைவில் முதலீடு செய்யத் தொடங்குவதன் அவசியத்தையும், முதலீட்டைத் தள்ளிப்போடுவதால் ஏற்படும் வாய்ப்புகளை இழப்பதற்கான சாத்தியங்களையும் புரிந்துகொள்ள உதவும்
கே.3. காஸ்ட் ஆஃப் இன்வெஸ்ட்மென்ட் டிலே கால்குலேட்டர் என்னென்ன காரணிகளைக் கணக்கில் எடுக்கும்?
பதில்: பொதுவாக, நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை, முதலீட்டுக் காலம், எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன்கள், தாமதமான காலம் போன்றவற்றை கால்குலேட்டர் கணக்கில் எடுக்கும்.
கே.4. காஸ்ட் ஆஃப் இன்வெஸ்ட்மென்ட் டிலே கால்குலேட்டர் வழங்கும் முடிவுகள் உத்திரவாதமானதா?
பதில்: குறிப்பிட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் கணக்கிடப்படுகிறது, உத்திரவாதமான ஒரு எதிர்கால பலன் என எடுத்துக்கொள்வதைவிட இதை ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்த வேண்டும்.
பொறுப்புத்துறப்பு:
1. இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.
2. மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.
3. பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.