ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர்

உங்கள் பணி ஓய்வுக்கால நிதியின் எதிர்கால பேலன்ஸைக் கணக்கிடுங்கள்

ஆண்டுகள்
ஆண்டுகள்
ஆண்டுகள்
%
%
%
ஓய்வுக்குப் பின் உடனடியாகத் தேவைப்படும் ஆண்டு வருமானம்
ஓய்வுக்குப் பின் தேவைப்படும் மொத்தத் தொகை
மொத்தத் தொகையை அடைவதற்குத் தேவைப்படும் மாதச் சேமிப்பு

பொறுப்புதுறப்பு:

கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.
இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.
மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.

MFSH ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர்

வேலை செய்யும் ஒவ்வொரு தனிநபருக்கும் ஓய்வூதியத் திட்டமிடல் அவசியமாகும். ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்கும் செயல்முறையானது வருமான ஆதாரங்களை அடையாளம் காணுதல், பயனுள்ள சேமிப்புத் திட்டத்தை நிறைவேற்றுதல், தேவையான நிதிகளை மதிப்பிடுதல், உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியைப் பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்தல் ஆகியவற்றைச் சார்ந்து இருக்கிறது.

எனினும், அதில் மிகவும் கடினமான பகுதி என்பது உறுதியான ஓய்வூதியக் காலத்திற்கு நீங்கள் எடுக்கும் சரியான முடிவுகளும் மற்றும் உங்கள் முதலீடுகளில் இருந்து பெறும் ரிட்டர்னைக் கணக்கிடுவதுமாகும். ஓய்வுக்குப் பின் தேவைப்படும் மொத்தத் தொகை மற்றும் அதை அடைவதற்கு எப்படிச் சேமிக்க/முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள விரும்பும் தனிநபர்களுக்கு, ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் உதவுகிறது.

ஓய்வூதியத் திட்டமிடல் என்றால் என்ன?

ஓய்வுக்குப் பின் தேவைப்படும் நிதியைச் சேமிப்பதே ஓய்வூதியத் திட்டமிடலாகும். ஓய்வூதியத்தைத் திட்டமிடும்போது, பணவீக்கத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும், ஓய்வுக்குப் பிந்தைய செலவினங்களை மதிப்பிட வேண்டும், ஓய்வுபெறும் காலத்தை மதிப்பிட வேண்டும், அபாயங்களை மதிப்பிட வேண்டும் மற்றும் விவேகமாக முதலீடுகளைச் செய்ய வேண்டும்.

மேலும், ஆயுட்காலம் அதிகரித்து வருவதால், உங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாதுகாப்பான நிதிக்கான தேவை அவசியம். ஓய்வுக்குப் பின் தேவைப்படும் நிதியையும் முதலீடுகளில் (ஓய்வுக்கு முன் & பின்) நீங்கள் பெறக்கூடிய ரிட்டர்னையும் கணக்கிட Mutual Funds Sahi Hai (MFSH) ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் உதவுகிறது.

MFSH ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் என்றால் என்ன?

MFSH ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் என்பது ஒரு ஆன்லைன் கருவியாகும். இது ஓய்வுக்குப் பின் உங்களுக்குத் தேவைப்படும் தொகையைக் கணக்கிட்டுக் காட்டும். இது நீங்கள் அடைய விரும்பும் மொத்த ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் உங்கள் முதலீட்டைத் திட்டமிட உங்களுக்கு உதவுகிறது.

இது இரண்டு முதன்மையான வழியில் உதவுகிறது, அவை:

1. நீங்கள் வாழும் தற்போதைய வாழ்க்கை முறையைப் பராமரிக்க உங்கள் ஓய்வுக்குப் பின் தேவைப்படும் பணத்தை காட்டும்.

2. உங்கள் முதலீடுகளில் இருந்து கிடைக்கும் ரிட்டர்னைக் கணக்கிடவும், மொத்த ஓய்வூதியத் தொகையை அடைவதற்கு நீங்கள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதைக் கணக்கிடவும் உதவும்.

ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?

MFSH ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டரில் ஃபார்முலா பெட்டி உள்ளது. இதில் நீங்கள், உங்களது தற்போதைய வயது, ஓய்வு வயது, ஆயுட்காலம், ஓய்வுக்குப் பின் தேவைப்படும் மாத வருமானம் ஆகியவற்றை உள்ளிடலாம். இதில் நீங்கள் மதிப்பிடப்பட்ட பணவீக்கத்தின் விகிதம், முதலீட்டில் எதிர்பார்க்கப்படும் ரிட்டர்ன், தற்போதைய சேமிப்புகள் (ஏதேனும் இருந்தால்) ஆகியவற்றையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த விவரங்களை உள்ளிடுவதன் மூலம், ஓய்வுக் காலத்தில் உங்களுக்குத் தேவைப்படும் ஆண்டு வருமானம், அந்தத் தொகையை அடைய தேவைப்படும் மாத சேமிப்பு ஆகியவற்றைக் கால்குலேட்டர் காட்டும்.

MFSH ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டரை எப்படிப் பயன்படுத்துவது?

சில படிகளை மட்டுமே கொண்டு இந்தக் கால்குலேட்டரை நீங்கள் பயன்படுத்தலாம். அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

படி 1: உங்கள் தற்போதைய வயதை உள்ளிடவும்.

படி 2: விருப்பப்படும் ஓய்வு வயதை உள்ளிடவும்.

படி 3: ஆயுட்காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படி 4: உங்கள் ஓய்வுக் காலத்தில் தேவைப்படும் மாத வருமானத்தை உள்ளிடவும்.

படி 5: நாட்டின் கணக்கிடப்பட்ட பணவீக்க விகிதத்தை உள்ளிடவும்.

படி 6: முதலீட்டில் எதிர்பார்க்கப்படும் ரிட்டர்னை உள்ளிடவும் (ஓய்வுக்கு முன்).

படி 7: முதலீட்டில் எதிர்பார்க்கப்படும் ரிட்டர்னை உள்ளிடவும் (ஓய்வுக்குப் பின்).

படி 8: ஓய்வுக் காலத்திற்காகத் தற்போது நீங்கள் வைத்திருக்கும் சேமிப்புகள் அல்லது முதலீடுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை உள்ளிடவும்.

இந்த விவரங்களை வழங்கிய பின், கால்குலேட்டர் திரையில் இவை காட்டப்படும்:

  • • ஓய்வுக்குப் பின் தேவைப்படும் ஆண்டு வருமானம்.
  • • அதற்குத் தேவையான கூடுதல் நிதிகள்.
  • • மொத்தத் தொகையை அடைவதற்குத் தேவைப்படும் மாதச் சேமிப்பு.

MFSH ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள்

ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் முதன்மை பலன்கள்:

ஓய்வுக் காலத்திற்கான பணத்தைச் சேமிக்க உதவுகிறது: 20கள் மற்றும் 30களிலேயே ஓய்வுக்கான சேமிப்புகளைத் தொடங்க வேண்டும். தனிநபர்களுக்குத் தேவையான நிதிகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அவற்றை எவ்வாறு சேர்ப்பது என்பதைத் தெரியப்படுத்துவதன் மூலம் ஆரம்பகாலச் சேமிப்பு மற்றும் முதலீட்டைக் கால்குலேட்டர் காட்டுகிறது.

ஓய்வுக்குப் பின் தேவைப்படும் மதிப்பிடப்பட்ட நிதியைத் தெரிந்துகொள்ள உதவுகிறது: உங்கள் ஓய்வுக் காலத்தில் சராசரியாக எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதைக் கணக்கிடுவது கடினமானதாகும். அதை இந்தக் கால்குலேட்டர் எளிதாகச் செய்கிறது. மேலும், இது ஓய்வுக் காலத்திற்கான மொத்த நிதியைக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சேர்க்கத் தற்போது நீங்கள் ஈட்ட வேண்டிய சேமிப்பு/முதலீட்டுத் தொகையைக் காட்டுகிறது.

ஓய்வுக் காலத்தில் தேவைப்படும் கூடுதல் செலவுக்கான தொகையைத் திட்டமிட இது உதவுகிறது: உங்கள் ஓய்வூதியத்தில் கூடுதல் செலவுகள் இருக்கும் பட்சத்தில், நீங்கள் அதை முன்கூட்டியே திட்டமிடலாம். ஓய்வூதிய வாழ்க்கைச் செலவுகள் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமென்பதால், அதற்கு நீங்கள் தயாராக இருக்கலாம்.

பொதுவான கேள்விகள்

கே1. Mutual Funds Sahi Hai (MFSH) ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் என்றால் என்ன?

MFSH ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் என்பது ஒரு ஆன்லைன் கருவியாகும். இது ஓய்வுக்குப் பின் உங்கள் வாழ்க்கைக்குத் தேவைப்படும் மொத்தத் தொகையைக் கணக்கிட உதவுகிறது.

கே2. MFSH ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?

இந்தக் கால்குலேட்டர் ஒரு ஃபார்முலா பெட்டியைப் பயன்படுத்தி உங்கள் ஓய்வுக் காலத்திற்குத் தேவைப்படும் தொகையைக் கணக்கிடுகிறது.

கே3. ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டரில் நான் என்னென்ன விவரங்களை வழங்க வேண்டும்?

உங்களது தற்போதைய வயது, ஆயுட்காலம், ஓய்வுக்குப் பின் தேவைப்படும் மாத வருமானம், கணக்கிடப்பட்ட ரிட்டர்ன் விகிதம், பணவீக்க விகிதம் ஆகியவற்றை நீங்கள் வழங்க வேண்டும்.

கே4. எனது ஓய்வுக் காலத்திற்கான மொத்தத் தொகையை அடைய சில பரிந்துரைக்கப்படும் முதலீட்டு திட்டங்கள் என்னென்ன?

நீங்கள் பங்கு முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பத்திரங்கள், PPF, தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் பலவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

கே5. ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் காட்டும் மதிப்பு சரியானதா?

ஓய்வூதியத் திட்டமிடலுக்கான கால்குலேட்டர் மதிப்பிடும் கணக்குகள் சரியானவை. எனினும், பிற பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக, உங்கள் முதலீடுகளுக்கான அபாயங்கள், எதிர்பாராத அவசரநிலைகள் மற்றும் பல.