ELSS என்பது ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டம் எனப்படும். இது வருமானவரிச் சட்டம் 1961 -இன் பிரிவு 80C -இன் கீழ் ரூ. 1.5 இலட்சம் வரை வரிவிலக்கு பெறுவதற்கு தனிநபர் அல்லது HUF -க்கு உதவுகிறது.
இவ்வாறு, ELSS திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ரூ. 50,000 முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகை அவரின் மொத்த வரிக்குரிய வருமானத்தில் இருந்து கழிக்கப்பட்டு, அவரின் வரிச் சுமை குறைக்கப்படும்.
இந்தத் திட்டங்கள், யூனிட்கள் ஒதுக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று வருடங்கள் லாக்-இன் காலகட்டத்தைக் கொண்டிருக்கும். லாக்-இன் காலகட்டம் முடிந்த பின்பு, யூனிட்களை பணமாக்கவோ அல்லது ஸ்விட்ச் செய்யவோ முடியும். குரோத் மற்றும் டிவிடென்ட் இரண்டு தேர்வுகளையும் ELSS வழங்குகிறது. முதலீட்டாளர்கள் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் முதலீடு செய்ய முடியும். அவ்வாறு ஒரு நிதியாண்டில் செய்யப்படும் ₹ 1.5 இலட்சம் வரையிலான முதலீடுகள் வரிவிலக்குக்கு தகுதி பெறுகின்றன.