மிகவும் எளிதாகப் பணமாக்கக்கூடிய சொத்துக்களில் மியூச்சுவல் ஃபண்ட்ஸும் ஒன்று. ஆஃப்லைனில் ஃபண்ட்களை பணமாக்குவதற்கு, பணமாக்குவதற்கான கோரிக்கைப் படிவத்தைக் கையொப்பமிட்டு (ரிடம்ஷன் ரிக்வெஸ்ட் ஃபார்ம்) AMC அல்லது பதிவாளரின் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் யூனிட் ஹோல்டர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தில் யூனிட் ஹோல்டரின் பெயர், ஃபோலியோ எண், திட்டத்தின் பெயர் மற்றும் பணமாக்க விரும்பும் யூனிட்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். பணமாக்கிய பின்பு வழங்கப்படும் நிதிகள் முதன்மை யூனிட் ஹோல்டரின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
சம்பந்தப்பட்ட ஃபண்டின் இணையதளத்திலும் மியூச்சுவல் ஃபண்ட்ஸை வாங்கவும், பணமாக்கவும் முடியும். விருப்பமான மியூச்சுவல் ஃபண்ட்டின் ‘ஆன்லைன் பரிவர்த்தனை’ பக்கத்தில் உங்களின் ஃபோலியோ எண் மற்றும்/அல்லது PAN -ஐ பயன்படுத்தி உள்நுழைந்து, திட்டம் மற்றும் நீங்கள் பணமாக்க விரும்பும் யூனிட்களின் எண்ணிக்கையை (அல்லத தொகையை) உள்ளிட்டு, பரிவர்த்தனையை உறுதிபடுத்தவும்.
கூடுதலாக, பல்வேறு AMC -களில் இருந்து வாங்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களை பணமாக்குவதற்கு, CAMS (கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்), கார்வி போன்ற பதிவாளர் நிறுவனங்களும் உதவுகின்றன. நீங்கள் ஆன்லைனில் படிவத்தைப் பதிவிறக்க முடியும் அல்லது அருகாமையிலுள்ள அலுவலகத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும். இந்த ஏஜென்சிகள் எல்லா AMC -களுக்கும் சேவையளிக்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.