அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும், இரண்டு திட்டங்களை வழங்குகின்றன - நேரடி (டைரக்ட்) மற்றும் வழக்கமான (ரெகுலர்). நேரடித் திட்டத்தில், முதலீட்டாளர் AMC யுடன் நேரடியாக முதலீட்டைச் செய்ய வேண்டும். இதில், பரிவர்த்தனை வசதிபடுத்தித் தருகின்ற விநியோகஸ்தர் யாரும் கிடையாது. வழக்கமான திட்டத்தில், விநியோகஸ்தர், புரோக்கர் அல்லது வங்கியாளர் போன்ற இடைத்தரகரின் மூலம் முதலீட்டாளர் முதலீடு செய்வார். இதில் AMC மூலம் இடைத்தரகருக்கு கட்டணம் வழங்கப்பட்டு, திட்டத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
எனவே, நேரடித் திட்டத்தில் விநியோகஸ்தர் கட்டணம் ஏதும் இல்லாததால், செலவு குறைவானது. அதே சமயத்தில், வழக்கமான திட்டத்தில், பரிவத்தனையை, வசதி செய்து தருவதற்காக விநியோகஸ்தருக்கு கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.
மேலும் வாசிக்க