மார்க்கெட் நிலையற்ற தன்மை அடையும்போது முதலீட்டாளர்கள் பலர் தங்களது முதலீட்டு முடிவுகள் குறித்து சந்தேகப்பட்டு, தங்கள் SIPகளை நிறுத்துவது குறித்தோ முதலீடுகளை வித்ட்ரா செய்வது குறித்தோ யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஏற்ற இறக்கம் கொண்ட மார்க்கெட் நிலவரத்தில் உங்கள் முதலீடுகள் சிவப்பு நிறத்தில் இருப்பதைப் பார்க்கக் கவலையாக இருக்கும்தான். ஆனால், மார்க்கெட் வீழ்ச்சியடையும் சமயத்தில் உங்கள் SIP முதலீடுகளை நிறுத்துவது நல்ல முடிவல்ல, ஏனெனில் அதே மாதாந்திர முதலீட்டுத் தொகைகளில் நீங்கள் கடைசியில் அதிக யூனிட்டுகளை வாங்கியிருப்பீர்கள். காய்கறிக்கடையாக இருந்தாலும் ஆன்லைன் ஷப்பிங்காக இருந்தாலும் பேரம்பேசுவது நம் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று, இல்லையா! அப்படியானால் விலைகள் குறையும்போது மியூச்சுவல்
மேலும் வாசிக்க