முதலீடு செய்யும்போது புரளிகளை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

Video

அடுத்த நிமிடம் மார்க்கெட் நிலவரம் எப்படிப் போகும் என்பதை யூகிக்க முடியாமல் போனதால் தங்கள் பணத்தை ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்து இழந்தவர்களைப் பற்றித் தெரியுமா? அடுத்து மார்க்கெட் எப்படிப் போகும் என்று தெரிந்ததால் நல்ல இலாபம் சம்பாதித்தவர்களைப் பற்றித் தெரியுமா? மிகச் சிறந்த மார்க்கெட் அனலிஸ்ட்கள் கூட, அடுத்த நொடி மார்க்கெட் எப்படிப் போகும் என்பதைத் துல்லியமாக யூகிக்க முடியாது. ஏனெனில் நிதி மார்க்கெட் என்பது பல்வேறு சென்டிமென்ட்களால் மாறக்கூடியது, மார்க்கெட் சென்டிமென்ட்களோ மார்க்கெட் செய்திகளால் மாறக்கூடியவை. 

முதலீட்டாளர்கள் இன்று மார்க்கெட் செய்திகளை எளிதில் தெரிந்துகொள்ள முடியும், உண்மையில் அது சரியாகவும் இருக்கலாம், வதந்தியாகவோ வெறும் சந்தேகமாகவோ கூட இருக்கலாம். முதலீட்டு முடிவுகள் சரியான, உண்மையான செய்திகளைப் பொறுத்து அமையும்போது நல்ல பலன்கள் கிடைக்கும். அதே சமயம் சந்தேகம் அல்லது வதந்திகளை மனதில் கொண்டு எடுக்கும் முதலீட்டு முடிவுகளால் முதலீட்டாளர்களுக்கு இழப்பே ஏற்படும். 

பிஹேவிரல் ஃபினான்ஸ் தியரியின்படி, இயல்பிலேயே முதலீட்டாளர்கள் பகுத்தாய்வு செய்து செயல்படும் குணம் இல்லாதவர்கள். அதாவது முதலீட்டுச் செயல்கள் என்பவை விரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் இருப்பதில்லை, புலன்கள் மற்றும் உணர்வுகள் சார்ந்த தாக்கங்களின் அடிப்படையிலேயே ஒரு கூட்டு மனப்பான்மையின் சக்தியால் உந்தப்பட்டு நடைபெறுகின்றன. ஆகவே, தவறான மார்க்கெட் தகவல்கள் முதலீட்டாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி முதலீட்டாளர்களின் வளங்களை பெரிய அளவில் அழித்துவிடும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.

சரிபார்க்கப்பட்ட செய்திகள் முதல் வதந்திகள் வரையான எல்லாவிதமான செய்திகளும் உலாவரும் மார்க்கெட்டில் ஒரு முதலீட்டாளர் எப்படித் தனது நிலையை பலமாக வைத்துக்கொள்வது? இந்த இடத்தில் தான், விரிவான ஆராய்ச்சியும் பகுப்பாய்வும் செய்யும் வசதியும் திறனும் இல்லாத, இலட்சக்கணக்கான சிறிய முதலீட்டாளர்களை மீட்க மியூச்சுவல் ஃபண்ட்கள் கைகொடுக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது, மேலே குறிப்பிட்ட எல்லா வகையான பிரச்சனைகளையும் தவிர்க்க உதவுகிறது. ஏனெனில் இங்கு துறை நிபுணர்களான ஃபண்ட் மேனேஜர்களே உங்கள் சார்பாக முதலீட்டு முடிவுகளை எடுக்கிறார்கள்.

ஃபண்ட் மேனேஜர்களிடம் அனலிஸ்ட் குழு இருக்கும். இவர்கள் ஒவ்வொரு செக்யூரிட்டியையும் வாங்கும், விற்கும், வைத்துக்கொள்ளும் முன்பு, பொதுவான தகவல்கள் அனைத்தையும் அடிப்படையாக வைத்து விரிவான ஆராய்ச்சி செய்து மதிப்பீடு செய்வார்கள்.  ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டி பற்றியோ கவலைப்படும் விதமாக உள்ள ஃபண்ட் பற்றியோ மார்க்கெட் செய்திகள் ஏதேனும் கேள்விப்பட்டால், எப்போது வேண்டுமானாலும் நீங்கள் SEBI-இல் பதிவுபெற்ற நிதி ஆலோசகரையோ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டரையோ தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். 

343
478

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?