இன்கம் டிஸ்ட்ரிபியூஷன்: ஒரு மியூச்சுவல் ஃபண்டில் பகிர்ந்தளிக்கக் கூடிய உபரித் தொகை இருந்தால், அது மீண்டும் அந்தத் தொகையை முதலீடு செய்யலாம் அல்லது முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம்.
IDCW: பகிர்ந்தளிக்கக் கூடிய உபரித் தொகை முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் போது, அது வருமானப் பகிர்வு மற்றும் கேப்பிட்டல் மூலதனப் பகிர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கும் மேலும் ஃபண்டில் முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் யூனிட்டுகளின் அடிப்படையில் இருக்கும்.
வரிவிதிப்பு: பெரும்பாலும் IDCW பேமென்ட்கள் வழக்கமான வருமானத்தை விட குறைந்த வட்டி விகிதம் கொண்டிருக்கும், ஆகவே வழக்கமான வருமானம் பெறுவதற்கான வரி சேமிப்பு மிக்க வழியாக அது விளங்குகிறது.
IDCW ஆப்ஷனில் இரண்டு வகைகள் உள்ளன, அவை:
IDCW பே-அவுட் ஆப்ஷன்: இந்த பிளானில், பெறப்பட்ட மொத்த லாபங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு பகிர்ந்தளிக்கும். இப்படிப் பகிர்ந்தளிக்கப்படும் போது ஃபண்டின் நெட் அசெட் வேல்யூ (NAV) பே-அவுட்டின் தொகை அளவு குறைகிறது.
IDCW ரீயின்வெஸ்ட்மென்ட் ஆப்ஷன்: ரொக்கமாக பே-அவுட்டைப் பெறாமல், பெறப்பட்ட லாபங்கள் மீண்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப்பட்டு முதலீட்டாளருக்காக கூடுதல் யூனிட்டுகள் வாங்கப்படுகின்றன. இதனால் முதலீட்டாளர் வைத்திருக்கும் யூனிட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, அதே சமயம் ஃபண்டின் NAV மதிப்பு பே-அவுட் தொகை அளவு குறைகிறது.
முதலீட்டாளர்களின் ரிட்டர்ன்கள் வருமானத்தின் டிஸ்ட்ரிபியூஷன், கேப்பிட்டல் வித்டிராயல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது என்று IDCW பிளான் முதலீட்டாளர்களுக்குத் தெளிவுபடுத்துகிறது.
டிவிடெண்ட் பிளான் என்பதை IDCW பிளான் என்று SEBI பெயர் மாற்றினாலும், இதன் கருத்துகள் அனைத்தும் மாறாமல் அப்படியே உள்ளன.
பொறுப்புதுறப்பு:
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.