பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட்கள் நீண்ட கால அளவில் செல்வத்தைச் சேர்ப்பதற்கான வழியாகக் கருதப்படுகின்றன, ஆனால் குறுகிய கால இலக்குகளுக்குப் பொருத்தமான சில வகை மியூச்சுவல் ஃபண்ட்களும் உள்ளன. ஒப்பீட்டில் குறைந்த கால வரம்பைக் கொண்ட நிதி இலக்குகளுக்கு உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதலீட்டுத் தெரிவுகளே குறுகிய கால இலக்குகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும்.
நெகிழ்த்தன்மையும் லிக்விடிட்டியும் கொண்ட குறுகிய கால இலக்குகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட்கள் கிடைக்கின்ற குறைந்த கால வரம்பிற்குள் ரிஸ்க்கைக் குறைக்கும் அதே சமயம், முதலீட்டிற்கு லாபத்தையும் பெற்றுத் தருவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன. சாத்தியமுள்ள ரிட்டர்ன்கள் மற்றும் அதிலுள்ள ரிஸ்க் இரண்டிற்கும் இடையிலான ஒரு சமநிலையை வழங்கும் வகையில் இந்த ஃபண்ட்கள் கட்டமைக்கப்படுகின்றன, குறுகிய கால நிதி இலக்குகளின் குறிப்பிட்ட தேவைகளுடன் ஒத்துப்போகின்றன.
எதிர்பாராத திடீர் செலவுகளுக்கான எமர்ஜென்சி நிதியை உருவாக்குதல், திட்டமிடப்பட்ட சுற்றுலா அல்லது விடுமுறைக்காக சேமித்தல், வீடு வாங்குவதற்கான முன் பணத் தொகையைத் திரட்டுதல், வாகனம் வாங்குவதற்கான நிதி, கல்வி செலவுகளுக்காக பணத்தை ஒதுக்குதல், திருமண செலவுகளை கவனித்துக் கொள்ளுதல், குறுகிய கால வீடு புதுப்பித்தல் செயல்களுக்கான நிதி திரட்டுதல் போன்ற பல்வேறு இலக்குகளுக்கு இந்த ஃபண்ட்கள் மிகவும் பொருத்தமானவை.
குறுகிய கால இலக்குகளுக்கான மியூச்சுவல் ஃபண்ட்களைத் தேர்வு செய்யும் முதலீட்டாளர்கள், தொழில்முறை நிபுணர்களினால் நிர்வகிக்கப்படுதல் , போர்ட்ஃபோலியோக்களின் டைவர்சிஃபிகேஷன், தேவைப்படும்போது எளிதில் பணத்தை எடுக்கக்கூடிய வசதி போன்ற அம்சங்களின் மூலம் நன்மைகளைப் பெறலாம்.
குறுகிய கால முதலீடுகளுக்கு சில வகை மியூச்சுவல் ஃபண்ட்கள் பொருத்தமானவையாக இருக்கும், அவை ஒவ்வொன்றும் அவற்றுக்கென்றே சில குறிப்பிட்ட பண்புகளையும் ரிஸ்க்கையும் கொண்டிருக்கும். குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட்களின் சில முக்கியமான வகைகள் பின்வருமாறு:
லிக்விட் ஃபண்ட்கள்: குறுகிய கால அரசாங்க செக்யூரிட்டிகள், மணி மார்க்கெட் இன்ஸ்ட்ருமென்ட்கள் போன்ற அதிக லிக்விடிட்டியும் பாதுகாப்பும் கொண்ட அசெட்டுகளில் முதலீடு செய்பவையே லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும். அதிகபட்சப் பாதுகாப்பு மற்றும் நிலைத் தன்மையைத் தக்கவைத்துக் கொள்ளும் அதே சமயம், தேவைப்படும் நேரத்தில் பணத்தை எளிதில் எடுக்கக்கூடிய வசதியையும் முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே இதன் முக்கியமான நோக்கமாகும்.
மணி மார்க்கெட் ஃபண்ட்கள்: ட்ரெஷரி பில்கள், டெபாசிட் சர்ட்டிஃபிகேட்டுகள், கமர்ஷியல் பேப்பர்கள் போன்ற குறுகிய கால, ரிஸ்க் குறைவான, எளிதில் மாற்றத்தக்க செக்யூரிட்டிகளில் முதலீடுகளை பிரதானமாக ஒதுக்கீடு செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட் வகைகளே மணிமார்க்கெட் ஃபண்ட்கள் ஆகும்.
குறுகிய கால டெப்ட் ஃபண்ட்கள்: குறுகிய கால முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட, நிலையான வருவாய் தரும் செக்யூரிட்டிகளில் பெருமளவில் முதலீடுகளை ஒதுக்கீடு செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட்களே குறுகிய கால டெப்ட் ஃபண்ட்கள் ஆகும். வட்டி விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் விளைவுகளைக் கட்டுப்படுத்தும் அதே சமயம், முக்கியமாக வட்டி வருமானத்தின் மூலம் ரிட்டர்ன்களைப் பெற்றுத் தருவதே இவற்றின் குறிக்கோளாகும்.
குறுகிய கால பாண்டு ஃபண்ட்கள்: குறுகிய கால பாண்டுகளைக் கொண்ட டைவர்சிஃபிகேஷன் செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோவில் பிரதானமாக முதலீடு செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட்களே குறுகிய கால பாண்டு ஃபண்ட்கள் ஆகும் இந்த ஃபண்ட்கள் குறைந்த ரிஸ்க்கைப் பராமரிக்கும் அதே சமயம், ஒப்பீட்டில் மணி மார்க்கெட் ஃபண்ட்களை விட அதிக ரிட்டர்ன்களை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
ஜில்ட் ஃபண்ட்கள்: ஜில்ட் ஃபண்ட்கள் என்பவை, முக்கியமாக அரசாங்க செக்யூரிட்டிகள் அல்லது ஜில்ட்களில் முதலீடு செய்கின்ற ஒரு வகை மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகும். அரசாங்க ஆதரவுள்ள செக்யூரிட்டிகள் பொதுவாக அதிக கிரெடிட் ரேட்டிங் கொண்டவையாக இருக்கும் என்பதால் இந்த ஃபண்ட்கள் ஒப்பீட்டில் குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டு வகையாக விளங்குகின்றன.
இருந்தாலும், குறுகிய கால மியூச்சுவல் ஃபண்ட்களில் ஈடுபடுவதற்கு முன்பு முதலீட்டாளர்கள் தங்களுடைய ரிஸ்க் தாங்கும் திறன், முதலீட்டுக் கால வரம்பு, நிதி இலக்குகள் ஆகியவற்றை சரியாக மதிப்பீடு செய்துகொள்வது முக்கியமாகும். அதுமட்டும் இல்லாமல், ஒரு நபரின் தேவைகள் மற்றும் மார்க்கெட்டின் நிலைக்கேற்ப அப்போதிருக்கும் மார்க்கெட் உத்திக்கும் ஏற்ப முதலீடுகளைத் தனிப்பயனாக்கம் செய்வதில் உதவி பெற ஒரு நிதி ஆலோசகரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது உதவியாக இருக்கும்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.