ULIP என்பது யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் ஆகும். இது பல்வேறு நிதிச் சந்தைகளில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டுக் கூறுடன் கூடிய ஓர் ஆயுள் காப்பீட்டு பாலிசி ஆகும். முதலீட்டுக் கூறின் மூலம் உருவாக்கப்படும் ரிட்டர்ன்கள் பாலிசியின் மதிப்பைத் தீர்மானிக்கின்றன. எனினும், பாலிசிதாரரின் இறப்பின் பேரில் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை, சந்தையின் ஒரு செயல்பாடாக இல்லாமல் இருக்கலாம் - அதாவது, குறைந்தபட்சக் காப்பீட்டுத் தொகை சந்தையால் பாதிக்கப்படாமல் இருக்கலாம். வேறு விதமாகக் கூற வேண்டுமானால், ULIP என்பது முதலீடும், காப்பீடும் ஒருங்கிணைந்த ஒரு ஹைபிரிட் (கலவையான) முதலீடு.
ULIP -இன் முதலீட்டுக் கூறு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றுதான் இருக்கும்.
1. இரண்டுமே நிர்வகிக்கப்படும் முதலீடுகள்.
2. இரண்டுக்குமே, ஒரு நிபுணர்களின் குழுவானது முதலீடுகளை நிர்வகிக்கும். மேலும் நிதிகள், குறிப்பிடப்படும் நோக்கத்துடன் இணக்கமாக முதலீடு செய்யப்படும்.
3. பர்சேஸுக்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு யூனிட்கள் ஒதுக்கித் தரப்படும். பின்பு அவ்வப்போது ஒரு யூனிட்டுக்கான NAV அறிவிக்கப்படும்.
ULIP என்பது இன்சூரன்ஸ் பாலிசி என்பதால், வழக்கமான முறையில் பிரீமியம் செலுத்தாமல் இருந்தால் அபாயக் காப்பீடு நிறுத்தப்படலாம்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸில், NAV -யின் கணக்கீட்டுக்கு முன்பு எல்லாச் செலவுகளும் விதிக்கப்படும். ஆனால் ULIP -இல் சில செலவுகள் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் போன்றும், சில முதலீட்டாளர்களின் கணக்கில் இருந்து, ஒரு சிறு எண்ணிக்கையிலான யூனிட்களை ரத்து செய்வதன் மூலமும் கணக்கிடப்படுகின்றன.
ஒரு ULIP முதலீடு கொண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட ஃபண்ட் தேர்வுகளைச் செய்ய முடியும் மற்றும் இந்த ஃபண்ட்ஸுக்கு இடையே முதலீட்டாளர்களால் சுதந்திரமாக ஸ்விட்ச் செய்துகொள்ள (மாறிக்கொள்ள) முடியும். இருந்தாலும், ஒரு வருடத்தில் செய்யக்கூடிய ஸ்விட்ச்களின் எண்ணிக்கையின் மீது சில திட்டங்கள், கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. மியூச்சுவல் ஃபண்ட்ஸாக இருக்கும் பட்சத்தில், ஒரு ஃபண்டில் இருந்து மற்றொரு ஃபண்டுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஸ்விட்ச் செய்ய முடியும். ஆனால் வெளியேறுகின்ற திட்டத்தைச் சார்ந்து, அதற்கு வெளியேற்றக் கட்டணங்கள் விதிக்கப்படலாம் அல்லது விதிக்கப்படாமல் இருக்கலாம்.