மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கான பல்வேறு வழிகள் என்னென்ன? zoom-icon

ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குவதற்குப் பல வழிகள் உள்ளன.

முறையாகப் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், ஒரு காசோலை அல்லது வங்கி டிராப்டை இணைத்து கிளை அலுவலகத்திலோ அல்லது மியூச்சுவல் ஃபண்ட்ஸுக்கான தனிப்பட்ட முதலீட்டாளர் சேவை மையங்களிலோ (ISC) அல்லது சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்ஸின் பதிவாளர் அல்லது பரிமாற்ற ஏஜெண்டிடமோ சமர்ப்பிப்பதன் மூலம் ஒருவர் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய முடியும்.

ஒருவர் சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்ஸின் இணையதளங்களின் மூலமும் ஆன்லைன் முதலீடு செய்ய முடியும்.

மேலும், நிதி இடைத்தரகரின் மூலம்/ அவரின் உதவியுடன் ஒருவர் முதலீடு செய்ய முடியும். அதாவது, AMFI -யுடன் பதிவு செய்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் மூலம் அல்லது எந்தவொரு விநியோகஸ்தரின் உதவி இன்றி நேரடியாக முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகஸ்தர் என்பவர், ஒரு தனிநபராகவோ அல்லது வங்கி, புரோக்கரிங் ஹவுஸ் அல்லது ஆன்லைன் விநியோகஸ்தர் போன்ற தனிநபர் அல்லாத நிறுவனமாகவோ இருக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பான முதலீட்டை உறுதிசெய்வதற்கான அனைத்து தேவையான பாதுகாப்புகளும் இருப்பதால், ஆன்லைனிலும் முதலீடு செய்யலாம். அது வசதியானதும், எளிதானதும் கூட.

344
343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?