இடப்பக்கம் உள்ள வீடியோவை பார்க்கும் போது, எல்லாச் சூழ்நிலைகளிலுமே ஒரு குறுகிய காலகட்டத்துக்கு, பணம் எதுவும் பலனளிக்காமல் இருப்பதைப் பார்க்கலாம். சில சூழ்நிலைகளில், பணத்தை எடுக்கவேண்டிய நேரத்தை நாம் அறிவதில்லை. முதலீட்டாளர் என்ன செய்வார்? பணத்தை எங்கு முதலீடு செய்யவேண்டும்?
பின்வரும் விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:
- ஒரு குறுகிய காலகட்டத்துக்கு பணத்தை முதலீடு செய்யவேண்டும்
- முதலீட்டின் மதிப்பு குறையக் கூடாது.
- குறைந்த அளவிலான ரிட்டர்ன் இருந்தால் கூட பரவாயில்லை, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட காலகட்டம் ஏதுமில்லை அல்லது காலகட்டம் என்ன என்று தெரியாது.
மேற்கண்ட நான்கு நிபந்தனைகளை வைத்துப் பார்க்கும் போது, ஃபிக்சட் டெபாசிட்டில் பணத்தை வைப்பது முதலீட்டாளரின் நோக்கத்தை பூர்த்தி செய்யும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே. ஃபிக்சட் டெபாசிட்டில் கிடைக்கும் பெரும் நன்மைகளுள் ஒன்று, அதன் பாதுகாப்பு. அதே சமயத்தில், அதன் பாதகமான அம்சம் என்னவென்றால் - குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே பணத்தை முதலீடு செய்ய முடியும் - காலகட்டத்தை தேர்ந்தெடுப்பதில் நெகிழ்தன்மை எதுவும் கிடையாது.
இந்தச் சூழலில் லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த வீடியோவில் காண்பிக்கப்படுவது போன்று, இதில் நியாயமான நல்ல ரிட்டர்ன்கள் (சேமிப்புக் கணக்குகளுடன் அல்லது மிகக் குறுகிய கால ஃபிக்சட் டெபாசிட்களுடன் ஒப்பிடும் போது) கிடைக்கும் மேலும் எந்த சமயத்திலும் பணத்தை எடுத்துக் கொள்ளமுடியும்.