பெங்களூரில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக ஃபிளைஇந்தியா ஏர்லைன்ஸில் காலை 8 மணி விமானத்தை நீங்கள் புக் செய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.நீங்கள் தவறான விமானத்தை புக் செய்துவிட்டதாகத் தெரியவருகிறது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.அதற்கு ஃபிளைஇந்தியா உங்களிடம் என்னென்ன வகையான கட்டணங்களை வசூலிக்கும் என்று நினைக்கிறீர்கள்?அதே விமான நிறுவனத்துடன் அதே நாளில், அதே பயணியின் பெயரில், அதே சேருமிடத்துக்கு டிக்கெட்டை புக் செய்தாலும் கூட, உங்கள் மனதை மாற்றிக் கொண்டதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளின் விஷயத்தில் , ஒரே திட்டத்திலுள்ள ஒரு தேர்வில் இருந்து மற்றொரு தேர்வுக்கு உங்களின் முதலீடுகளை ஸ்விட்ச் செய்வது கூட ஒரு விற்பனையாகவே (ரிடம்ஷன்) கருதப்படுகிறது.எனவே, இவ்வாறு ஸ்விட்ச் செய்யும் போது, வெளியேற்றக் கட்டணமும், நீங்கள் முதலீடு செய்துள்ள காலத்தைப் பொறுத்து மூலதன இலாப வரியும் விதிக்கப்படும்.
ஒரே திட்டத்தில் உள்ள இரண்டு தேர்வுகள், மாறுபட்ட NAVகளை கொண்டிருக்கும் என்பதுடன் வெவ்வேறு மாதிரியாகச் செயல்படும்.
- கூட்டு வட்டியின் பலனால், ஃபண்ட்களில் இருந்து பெறப்படும் இலாபங்களை குரோத் தேர்வு ,மறுமுதலீடு செய்யும். மேலும் இது நீண்டகாலத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கு மிகவும் பொருத்தமானது.
- டிவிடென்ட் தேர்வு ,பண்டில் இருந்து உருவாக்கப்படும் இலாபத்தை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளித்திடும்.தங்களின் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் இருந்து, வழக்கமான வருவாயைப் பெற விரும்பும் நபர்களுக்கு இந்தத் தேர்வு பொருத்தமானது.
டிவிடென்ட் தேர்வில் இருந்து குரோத் தேர்வுக்கோ அல்லது குரோத் தேர்வில் இருந்து டிவிடென்ட் தேர்வுக்கோ நீங்கள் மாற விரும்பினால், வெளியேற்றக் கட்டணம் அல்லது மூலதன இலாப வரி விதிக்கப்படுமா என்று சரிபார்க்க வேண்டும்.