இதற்கு நாங்கள் கூறும் பதில், ஒரு பெரிய ஆமாம்! நிதியின் சிறந்த செயல்திறனை உருவாக்குவதில் பணத்தை நிர்வகிப்பதில்/முதலீட்டைச் செய்வதிலான அனுபவம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அனுபவம் நிறைய இருந்தால், இலாபகரமான முதலீட்டுத் தீர்மானங்களைச் செய்வதிலான வாய்ப்பு சிறப்பாக இருக்கும்.
ஆபரேஷன் தியேட்டரில் உள்ள சர்ஜனை போன்றுதான் இந்த ஃபண்ட் மேனேஜரும். முக்கியமான அறுவைசிகிச்சை நடைமுறைகளை சர்ஜன் மேற்கொள்வார், அவருக்கு உதவியாக உதவி சர்ஜன், மயக்க நிபுணர்கள், நர்ஸ்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் இருப்பர். அதேபோன்று, ஃபண்ட் மேனேஜருக்கு உதவியாக, ஆராய்ச்சிக் குழு, ஜூனியர் ஃபண்ட் மேனேஜர்கள் மற்றும் ஒரு செயல் குழு ஆகியோர் இடம் பெற்றிருப்பர். வெற்றிகரமான ஆப்பரேஷனை செய்து முடிப்பதற்கு, ஒரு சர்ஜனுக்கு எப்படி நவீன உபகரணங்கள் தேவையோ, அதுபோன்று ஃபண்ட் மேனேஜருக்கும் சமீபத்திய தகவல், அறிக்கைகள் மற்றும் பகுப்பாய்வுகள் தேவை.
அனுபவம் வாய்ந்த ஒரு ஃபண்ட் மேனேஜர் பல பொருளாதாரச் சுழற்சிகள், வர்த்தக மேம்பாடுகள், அரசியல் மற்றும் கொள்கை மாற்றங்களைக் கடந்து வந்திருப்பார். இதுபோன்ற பிரச்சினைகள் முதலீட்டின் செயல்திறனில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஒரு சராசரி முதலீட்டாளரின் புரிதலைத் தாண்டிய விஷயங்களாக இந்தப் பிரச்சினைகள் இருப்பதால், ஃபண்ட் மேனேஜர் தனது சொந்த நிபுணத்துவத்தையும் திறனையும், அதோடு மட்டுமல்லாது தன்னால் அணுகமுடியக் கூடிய தகவல் மற்றும் தரவுகளின் ஒருங்கிணைந்த அறிவையும் பயன்படுத்திடுவார்.