அப்சொல்யூட் ரிட்டர்ன் என்றால் என்ன?

Video

”இந்த வீட்டை நான் 2004-இல் 30 இலட்சத்திற்கு வாங்கினேன். இப்போது அதன் மதிப்பு 1.2 கோடி! 15 வருடங்களில் அதன் மதிப்பு 4 மடங்கு அதிகமாகியுள்ளது” என்றெல்லாம் சிலர் பேசுவதைக் கேட்டிருப்பீர்கள்! அப்சல்யூட் ரிட்டர்ன் என்பதற்கு இதையே ஓர் உதாரணமாகக் கூறலாம்.

ஒரு முதலீட்டின் இறுதி விலை மதிப்பை, ஆரம்ப முதலீட்டுத் தொகையுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட கால அளவில் அது எவ்வளவு வளர்ந்துள்ளது என்பதன் அளவீடே அப்சல்யூட் ரிட்டர்ன் ஆகும். 

உதாரணமாக, நீங்கள் 5 வருடங்களுக்கு முன்பு ஒரு ஃபண்டில் ரூ.5000 முதலீடு செய்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்று உங்கள் முதலீடுகளின் மதிப்பு ரூ.6000 என்றால், நீங்கள் பெற்றுள்ள இலாபம் ரூ.1000.

மேலும் வாசிக்க

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?