நேரடித் திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது

Video

சிலருக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் எளிதான விஷயமாகத் தோன்றலாம், இன்னும் சிலருக்கு அது புரிந்துகொள்ளக் கடினமான விஷயமாகத் தோன்றலாம். மியூச்சுவல் ஃபண்ட் என்பது எப்படி வேலை செய்கிறது, அதில் என்னென்ன ரிஸ்க்குகள் எல்லாம் எதிர்வரக்கூடும் என்பதைப் பற்றியெல்லாம் முழுவதுமாகப் புரிந்துகொள்வது புதிய முதலீட்டாளர்களுக்குக் கடினமாக இருக்கலாம். இன்று மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்கள் இருப்பதால், தனக்கு எந்த வகை ஃபண்ட்கள் மிக ஏற்றவை என்பதைத் தேர்ந்தெடுப்பது முதலீட்டாளர்களுக்குக் கடினமாக இருக்கலாம். 

எனினும், மார்க்கெட் பற்றியும் மியூச்சுவல் ஃபண்ட்களைப் போல மார்க்கெட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கின்ற பல்வேறு முதலீட்டுத் தயாரிப்புகளைப் பற்றியும் பல முதலீட்டாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். அது போன்றவர்கள், மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதில் நல்ல அனுபவம் கொண்டிருப்பார்கள் அல்லது அது குறித்து நன்கு படித்து ஆழமாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த வகையான முதலீட்டாளர்களுக்கு, மியூச்சுவல் ஃபண்ட்கள் வேலை செய்யும் விதமும், அவற்றின் வகைகளும் உப-வகைகளும், இந்த ஃபண்ட்களில் கிடைக்கும் ரிஸ்க் இல்லாத டிரேட்-ஆஃப் மற்றும் அவற்றின் முதலீட்டு உத்தியும் பற்றி நன்கு தெரியும். இவர்கள் தாங்களாகவே ஆராய்ச்சி செய்து, தங்கள் பணத்தை முதலீடு செய்யவும் முதலீடுகளைக் கண்காணிக்கவும், கணிசமான எண்ணிக்கையிலான நல்ல ஸ்கீம்களைக் கண்டறியவும் முடியும். இது போன்றவர்கள், மியூச்சுவல் ஃபண்ட்களில் டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்யலாம். இவர்களுக்கு தங்கள் ஸ்கீம் தெரிவுகளை நிர்வகிக்கப் போதிய நம்பிக்கை இருக்கும் என்பதால், இவர்கள் டைரக்ட் பிளானில் முதலீடு செய்வது சரியாக இருக்கும். அதோடு, டைரக்ட் பிளான்களில் ரெகுலர் பிளான்களைவிட செலவுக் கட்டணங்கள் குறைவு.

டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்ய, மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் அல்லது அவர்களது இணையதளத்திலும் நேரடியாக முதலீடு செய்யத் தொடங்கலாம். முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் அக்ரிகேட்டர் மூலமாகவோ, மியூச்சுவல் ஃபண்ட் ரெஜிஸ்ட்ரார் இணையத்தளத்திலோ டைரக்ட் பிளான்களில் முதலீடு செய்யலாம்.  ரெகுலர் பிளானோ டைரக்ட் பிளானோ, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது மிக எளிது!

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?