ஈக்விட்டி இன்டெக்ஸ்களை மதிப்பீடு செய்வதில் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸ் (TRI) முக்கியப் பங்கு வகிக்கிறது.
கேபிட்டல் கெயின்களுடன் கூடுதலாக, பங்களிக்கும் மொத்தத் தொகுதியில் (பேஸ்கட்) இருந்து உருவாக்கப்படும் டிவிடெண்டுகள்/ வட்டி பேமெண்ட்கள் அனைத்தையும் ஒரு இன்டெக்ஸின் டோட்டல் ரிட்டர்ன் வேரியன்ட் (TRI) கருத்தில் கொள்கிறது. ஆகவே மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் செயல்திறன்களை ஒப்பிட TRI மிகவும் தகுந்த ஒரு அளவீடாகத் திகழ்கிறது.
TRI-இன் முக்கியமான பண்புகள்:
SEBI மேண்டேட்: 2018-இல், மியூச்சுவல் ஃபண்டின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கு TRI குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்பதை SEBI கட்டாயமாக்கியது. இப்போது, மியூச்சுவல் ஃபண்ட்கள் டோட்டல் ரிட்டர்ன் இன்டெக்ஸின் அடிப்படையிலேயே தங்கள் செயல்திறனை வெளிப்படுத்த வேண்டும், ப்ரைஸ் ரிட்டர்ன் இன்டெக்ஸின் அடிப்படையில் (முன்னர் இருந்த முறை) அல்ல. முன்னர் இருந்த ப்ரைஸ் ரிட்டர்ன் இன்டெக்ஸானது கேபிட்டல் அப்ரிசியேஷனை மட்டுமே கருத்தில் கொள்ளும். இந்த விதிக்கு இணங்குவதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேம்படுவது மட்டுமின்றி தொழிற்துறையின் தரநிலைகளும் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றன.
டிவிடெண்டுகளை உள்ளடக்குகிறது: இந்த வருவாயானது ஸ்டாக் டிவிடெண்டுகள், பாண்டுகளில் இருந்து கிடைக்கும் வட்டி, பெஞ்ச்மார்க் இன்டெக்ஸிற்குள் உள்ள பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் ஆகிய அனைத்தையும் உள்ளடக்குகிறது.
ரீ-இன்வெஸ்ட்மென்ட்: டிவிடெண்டுகள் போன்ற, உருவாக்கப்படும் எந்த வருவாயும் மீண்டும் இன்டெக்ஸில் ரீ-இன்வெஸ்ட்மென்ட் செய்யப்படுவதாக TRI கருதுகிறது.
முதலீட்டாளர் வெளிப்படைத்தன்மை: இது ஃபண்டின் செயல்திறன் குறித்த உண்மையான மற்றும் வெளிப்படையான பார்வையை வழங்குகிறது. காலப்போக்கில் ஒரு ஸ்கீமின் வளர்ச்சி மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கான வழிகாட்டும் குறிப்பாகச் செயல்படுகிறது.
நீண்டகால இலக்குகள்: நீண்ட கால அளவில் ஃபண்ட்களை மதிப்பீடு செய்ய TRI சிறந்தது.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.