லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர்

உங்கள் தற்போதைய முதலீட்டைக் கருத்தில் கொண்டு தேவையான லம்ப்சம் தொகையைக் கணக்கிடுவதன் மூலம் உங்கள் நிதி இலக்கைத் திட்டமிடுங்கள்.

வருடங்கள்
%
%
முதலீடு செய்த மொத்தத் தொகை ₹1.27 Lakh
இறுதி கார்ப்பஸ் தொகை ₹1.27 Lakh
மொத்த கார்ப்பஸ் தொகை (பணவீக்கத்திற்காகச் சரிக்கட்டப்பட்டது) ₹1.27 Lakh

பொறுப்புதுறப்பு:

கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.
இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.
மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.

%
₹1.27 Lakh
%
வருடங்கள்
முதலீட்டுத் தொகை
முதலீடு செய்ய வேண்டிய லம்ப்சம் தொகை ₹1.27 Lakh

பொறுப்புதுறப்பு:

கடந்தகால செயல்திறன் எதிர்காலத்தில் நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் போகலாம், அது எதிர்கால ரிட்டர்ன்களுக்கு உத்தரவாதம் கிடையாது.
இந்தக் கால்குலேட்டர்கள் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமே, இவை உண்மையான ரிட்டர்ன்களைக் குறிப்பிடவில்லை.
மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒரு நிலையான ரிட்டர்ன் விகிதம் கொண்டவை அல்ல, மேலும் ரிட்டர்ன் விகிதத்தைக் கணிப்பது முடியாது.

லம்ப்சம் முதலீடு என்றால் என்ன?

ஒரே முறை செய்யப்படும் முதலீடு என்றும் அழைக்கப்படுகின்ற லம்ப்சம் முதலீடு என்பது நீங்கள் முதலீடு செய்த பணம், குறிப்பிட்ட ஒரு கால வரம்பில் கூட்டு வட்டியின் சக்தியால் ரிட்டர்ன்களைப் பெற்றுத்தர வழிவகுக்கும் வகையில், ஒரே ஒரு முறை நீங்கள் முதலீடு செய்யக்கூடிய ஒரு வகை முதலீடாகும்.

லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர் என்பது என்ன?

லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர் என்பது, மியூச்சுவல் ஃபண்ட்களில் நீங்கள் செய்யக்கூடிய லம்ப்சம் முதலீட்டின் மதிப்பிடப்பட்ட முதிர்ச்சி மதிப்பைக் கணக்கிடுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு மென்பொருள் கருவியாகும்.

எளிமையாகக் கூறுவதானால், நீங்கள் இன்று செய்யும் முதலீடு குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் எதிர்காலத்தில் என்ன மதிப்பைக் கொண்டிருக்கும் என்ற மதிப்பீட்டை மியூச்சுவல் ஃபண்ட் லம்ப்சம் கால்குலேட்டர் உங்களுக்குக் கூறும்.

உதாரணமாக, 12% என்ற வட்டி விகிதத்தில் பத்து வருடங்களுக்கு நீங்கள் ரூ.2 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். லம்ப்சம் ரிட்டர்ன் கால்குலேட்டரின் கணக்கின்படி, உங்கள் முதலீடுகளின் எதிர்கால மதிப்பே உங்கள் கார்ப்பஸ் தொகை மதிப்பாக இருக்கும், அது ரூ.6,21,169.64 என்று இருக்கும். ஆனால் இது உங்களுக்குக் கிடைக்கும் ரிட்டர்ன் எவ்வளவு இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு மதிப்பீடு மட்டுமே, இதுவே உண்மையான மதிப்பு அல்ல, ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட்கள் மார்க்கெட்டின் நகர்வுகளால் பாதிக்கப்படக்கூடியவை.

MFSH லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டரை எப்படிப் பயன்படுத்துவது?

Mutual Funds Sahi Hai(MFSH) லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர் பயன்படுத்த மிகவும் எளிதான ஒரு ஆன்லைன் கருவியாகும், இதை யார் வேண்டுமானாலும் எளிதாகப் பயன்படுத்தலாம். லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டரின் இவற்றைப் போன்ற அடிப்படை விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும்:

 

a) ஆரம்ப முதலீட்டு தொகை

b) ரிட்டர்ன் விகிதம்

c) முதலீடு செய்யப்படும் வருடங்கள் (முதலீட்டு கால அளவு)

 

கருவியில் இந்த விவரங்களை நீங்கள் வழங்கியதும், இந்த லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் எதிர்கால மதிப்பு என்னவாக இருக்கும் என்பதற்கான மதிப்பீட்டை நீங்கள் காணலாம்.

லம்ப்சம் மியூச்சுவல் ஃபண்ட் ரிட்டர்ன்களைக் கணக்கிடுவதற்கான ஃபார்முலா

உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் லம்ப்சம் முதலீட்டின் ரிடெம்ப்ஷன் மதிப்பானது மேலே குறிப்பிட்டுள்ளபடி உங்கள் முதலீடுகளின் மார்க்கெட் செயல்திறனின் அடிப்படையில் இருக்கும். இருந்தாலும், லம்ப்சம் முதலீடுகளில் இருந்து கிடைக்கக்கூடிய ரிட்டர்ன்களை மதிப்பிடுவதற்கு மியூச்சுவல் ஃபண்ட் லம்ப்சம் கால்குலேட்டர் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறது. அதில் பயன்படுத்தப்படும் ஃபார்முலா பின்வருமாறு:

A = P (1 + r/n) ^ nt

 

r - மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன்கள்

P – அசல் பங்களிப்புகள்

T – மொத்தக் கால அளவு

n - பங்களிப்புகளின் எண்ணிக்கை

 

உதாரணத்திற்கு ஒரு கணக்கீடு -

 

அசல்: 50,000

ரிட்டர்ன் விகிதம்: 12%

கால அளவு: 10 வருடங்கள்

A = P (1 + r/n) ^ nt

= ரூ.1.55 லட்சம் (இதுவே மதிப்பிடப்பட்ட ரிடெம்ப்ஷன் மதிப்பாக இருக்கும்.)

லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர் உங்களுக்கு எப்படி உதவும்?

இந்த லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர் உங்களுக்கு இவற்றுக்கு உதவும்:

முதலீட்டுக் காலம் முழுமைக்குமான மதிப்பிடப்பட்ட ரிட்டர்ன்களின் அளவை வழங்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்கள் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படக்கூடியவை, மேலும் அவற்றை முன்பே கணிக்கவும் முடியாது என்றாலும், முதலீட்டு கால்குலேட்டரானது தேவையான கணக்கீடுகளை உங்களுக்கு வழங்கக்கூடும் (நாமே கணக்கீடு செய்யும் போது ஏற்படும் பிழைகள் இல்லாமல்.)

இது எளிமையானது மற்றும் பயன்படுத்த எளிதானது, மேலும் மற்ற முறைகளுடன் ஒப்பிடும்போது கணக்கீடுகளை எளிதாக செய்யமுடிவதை இது உறுதிசெய்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் லம்ப்சம் கால்குலேட்டரானது, மதிப்பிடப்பட்ட ரிட்டர்னின் அடிப்படையில் உங்கள் நிதியை இன்னும் சிறப்பாகத் திட்டமிட உதவுகிறது.

இந்த லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது?

Mutual Funds Sahi Hai இணையதளத்தில் கிடைக்கின்ற லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டரானது, அவசியமான புலங்களில் வழங்கப்படும் அத்தியாவசியமான மாறிகளில், மேலே குறிப்பிட்ட ஃபார்முலாவைப் பயன்படுத்தி, உடனடியாக, சில வினாடிகளிலேயே மதிப்பிடப்பட்ட தொகையை உங்களுக்கு வழங்குகிறது.

உண்மையான ரிட்டர்ன்களின் மதிப்பு மாறுபடக்கூடும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியமாகும். முதலீட்டின் உண்மையான செயல்திறனை கட்டணங்கள், வரிகள், மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்கள் போன்றவை பாதிக்கக்கூடும்.

MFHS லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டரைப் பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள்

இந்த லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர் பின்வருபவை போன்ற பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஒரு நிதியியல் கருவியாகும்:

 

1. முதலீடு செய்யவேண்டிய தொகையை முடிவு செய்ய இது உதவுகிறது: இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு சிறந்த முதிர்ச்சித் தொகையைப் பெறுவதற்குத் தேவையான கணிசமான லம்ப்சம் தொகை எவ்வளவு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

2. முதலீட்டுத் திட்டமிடுவது எளிது: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டமிடுதலுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவியாகவும் இது உதவுகிறது.

பொதுவான கேள்விகள்

Q1. லம்ப்சம் முதலீடு ஏன் ஒரு சிறந்த தெரிவு?

லம்ப்சம் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது SIP முறையில் முதலீடு செய்ய வேண்டுமா என்பது முதலீடு செய்பவரின் நிதி இலக்குகளைப் பொறுத்தது. ஆனால், நீண்ட கால முதலீடுகளைச் செய்யும் முதலீட்டாளர்களுக்கு லம்ப்சம் முதலீடு சிறந்த தெரிவாக இருக்கும், ஏனெனில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை தொடர்ச்சியாக அவர்களுக்கு முதலீட்டுப் பணத்தைச் செலுத்த நினைவூட்ட வேண்டியிருக்காது.

Q2. லம்ப்சம் கால்குலேட்டர் துல்லியமான மதிப்பீட்டை வழங்குமா?

கால்குலேட்டர் துல்லியமான கணக்கீடுகளை செய்துகொடுக்கும், ஆனால் அதுவே உங்கள் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய சரியான மதிப்பு அல்ல, ஏனெனில் மியூச்சுவல் ஃபண்ட்கள் மார்க்கெட் ரிஸ்க்குகளுக்கு உட்பட்டவை.

Q3. Mutual Funds Sahi Hai லம்ப்சம் முதலீட்டு கால்குலேட்டர் பயன்படுத்தும் ஃபார்முலா என்ன?

இந்தக் கால்குலேட்டர் பயன்படுத்தும் ஃபார்முலா: A = P (1 + r/n) ^ nt.

Q4. எப்போது நான் லம்ப்சம் முதலீட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும்?

மார்க்கெட் இறங்குமுகமாக இருக்கும் சமயத்தில் லம்ப்சம் முதலீட்டை செய்யலாம். விலைகள் குறைவாக இருக்கும் போது நீங்கள் அதிக யூனிட்டுகளை வாங்க முடியும். அவை விலை அதிகரித்து நீண்டகாலவாக்கில் உங்களுக்கு நல்ல ரிட்டர்ன்களை வழங்கும்.