முதலீட்டாளர்களின் ஃபண்டுகளை வைத்திருக்கும்போது அசெட் அலகேஷனை ஒரு மியூச்சுவல் ஃபண்டு மாற்றமுடியுமா?

முதலீட்டாளர்களின் நிதிகளை முதலீடு செய்யும் போது, சொத்து ஒதுக்கீட்டை ஒரு மியூச்சுவல் ஃபண்டால் மாற்ற முடியுமா? zoom-icon

திட்டத் தகவல் ஆவணத்தின்படி (SID), ஒரு மியூச்சுவல் ஃபண்ட் பல்வேறு சொத்து வகைகளில் (அசெட் கிளாஸ்) முதலீடு செய்யும். முன்மொழியப்படும் சொத்து வகைக்கான வழக்கமான உதாரணங்கள்:

  • ஈக்விட்டி ஃபண்டானது 80% முதல் 100% வரை ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம்; 0% முதல் 20% வரை பணச் சந்தை செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யலாம்.
  • ஒரு பேலன்ஸ்டு ஃபண்டின் சொத்து ஒதுக்கீடு 65% முதல் 80% வரை ஈக்விட்டியிலும், 15% முதல் 35% வரை டெப்ட் செக்யூரிட்டிகளிலும் இருக்கலாம்; 0% முதல் 20% வரை பணச் சந்தை செக்யூரிட்டிகளில் இருக்கலாம்.

பெரும்பாலும், சொத்து வகையிலான ஒதுக்கீடானது இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்குள் இருக்கும். SID -யில் அமைக்கப்பட்டுள்ள அளவுகளை விட அதிகமான அளவில் ஃபண்ட் மேனேஜரால் சொத்து ஒதுக்கீட்டை மாற்ற முடியாது, ஆனால் கொடுக்கப்பட்ட வரம்புக்குள் அவரால் மாற்றங்களை செய்ய முடியும். உதாரணத்திற்கு, ஈக்விட்டியின் உள்ளே, லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனங்களுக்கு இடையேயான ஒதுக்கீடு இங்கு குறிப்பிடப்படவில்லை. இதனால் வெவ்வேறு சமயங்களில் லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவனங்களுக்கு இடையே வெவ்வேறு அளவில் ஃபண்ட் மேனேஜரால் ஒதுக்கீடு செய்யமுடியும்.

திட்டத்தின் சொத்து ஒதுக்கீட்டில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யத் தேவையிருந்தால், அந்த ஃபண்டின் அறங்காவலர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள யூனிட்ஹோல்டர்களிடம் இருந்து, நிதி மேலாண்மை நிறுவனம் ஒப்புதலைப் பெற வேண்டும். முன்மொழியப்பட்ட மாற்றத்தை, அந்த நிறுவனம் பொதுவாக அறிவிக்கவும் வேண்டும். ஏற்கனவே உள்ள அனைத்து முதலீட்டாளர்களும், வெளியேற்றக் கட்டணங்கள் ஏதுமின்றி 30 நாட்களுக்குள் திட்டத்தில் இருந்து விலகிக்கொள்ள முடியும்.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?