SIP, லம்ப்சம் இவை இரண்டில் எதன் வழியாக ELSS-இல் முதலீடு செய்வது என்பது பற்றிய முடிவானது, நீங்கள் எப்போது, எதற்காக முதலீடு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததாகும். நிதி ஆண்டின் இறுதியில் வரியைச் சேமிக்க விரும்பினால், லம்ப்சமில் முதலீடு செய்வது நல்ல முடிவாக இருக்கும். ஆனால், நீங்கள் நிதியாண்டின் தொடக்கத்திலேயே முதலீடு செய்யத் தொடங்குகிறீர்கள் எனில், லம்ப்சம், SIP ஆகிய இரண்டு வழிகளில் எதில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ELSS முதலீடு வரி சேமிப்பு அனுகூலங்களை அளிக்கிறது, அதோடு ஈக்விட்டிகளின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறையும் கொண்டுள்ளது.
SIP வழியாக ELSS முதலீடு செய்வதில் இரண்டு நன்மைகள் உள்ளன. முதலில், வருடம் முழுவதும் உங்கள்