ஆர்பிட்ரேஜ் ஃபண்ட்கள் என்பவை பல்வேறு கேபிட்டல் மார்க்கெட்டுகளில் இருக்கும் ஒரே விதமான அசெட்டுகளுக்கு ஆர்பிட்ரேஜ் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்ற ஒரு ஹைப்ரிட் வகை மியூச்சுவல் ஃபண்ட்களாகும். ஸ்பாட் மார்க்கெட் மற்றும் ஃபியூச்சர் மார்க்கெட் போன்றவற்றில் ஒரே அசெட்டின் விலை வேறுபாடுகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையே ஆர்பிட்ரேஜ் என்கிறோம்.
ஸ்பாட் மார்க்கெட் என்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் ஒரு அசெட்டுக்கு ஒரு விலையை ஒப்புக்கொண்டு அப்போதே அந்த அசெட்டுக்கு ரொக்கத்தைப் பரிமாற்றிக்கொள்ளும் இடமாகும். இதற்கு மாறாக, ஃபியூச்சர்ஸ் மார்க்கெட் என்பது வாங்குபவர்களும் விற்பவர்களும் ஒரு அசெட்டுக்கான எதிர்காலத் தேதிக்குரிய விலையை ஒப்புக்கொள்வார்கள். அதாவது, எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட விலைக்கு ஒரு
மேலும் வாசிக்க284