மியூச்சுவல் ஃபண்டுகளை ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட் என வகைப்படுத்தலாம். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? வாருங்கள் பார்க்கலாம்.
1) அப்படி என்றால் என்ன?
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு முதலீட்டு வகை. இதில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை வாங்கவோ விற்கவோ செய்யலாம். புதிய ஃபண்ட் ஆஃபர் (NFO) முடிந்தால், சில நாட்களுக்குள்ளேயே முதலீடுகளை இந்த ஃபண்ட் பெறத் தொடங்கும். திட்டத் தகவல் ஆவணத்தில் உள்ளபடி திட்டத்தில் உள்ள பங்குகளில் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம்.
குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?
நிர்ணயிக்கப்பட்ட முதிர்வுத் தொகை அல்லது முதிர்வுக் காலம் உள்ள மியூச்சுவல் ஃபண்டுகள் தான் குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) வரையறுக்கிறது. இந்தத் திட்டம் தொடங்கும்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை சந்தா சேருவதற்கு இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் கிடைக்கும், இதை முதலீட்டுக் காலம் முடிந்த பிறகு எடுத்துக்கொள்ளலாம்.
2) இவை எப்படிச் செயல்படுகின்றன?
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள்
அனைத்து மியூச்சுவல் ஃபண்டுகளும் முதலில் சந்தையில் புதிய ஃபண்ட் ஆஃபர் (NFO) மூலமாகக் கிடைக்கும். வழக்கமாக, NFO அதிகபட்சம் 15 நாட்களுக்குக் கிடைக்கும். NFO உருவாக்கியபிறகு, ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் முதலீடு செய்யும்போது, நிகர சொத்து மதிப்பில் (NAV) யூனிட்டுகளை வாங்கவோ விற்கவோ செய்ய வேண்டும். NAV என்பது ஃபண்ட் முதலீடு செய்த அனைத்து செக்யூரிட்டிகளின் பங்குகளின் மார்க்கெட் மதிப்பு ஆகும். செக்யூரிட்டிகளின் மார்க்கெட் மதிப்பிற்கு ஏற்ப NAV தினமும் ஏறி இறங்கும். இந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் வெளியிடும் யூனிட்டுகளின் எண்ணிக்கைக்கு வரம்புகளும் இல்லை, முதிர்வுக் காலமும் இல்லை.
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளை தொழில்முறைப் பயிற்சி பெற்ற ஃபண்ட் மேனேஜர்கள் நிர்வகிக்கின்றனர், ஃபண்டின் இலக்குகள் மற்றும் ஆஃபர் ஆவணங்களைப் பொறுத்து முதலீட்டு முடிவுகளை எடுக்கின்றனர். திட்டத் தகவல் ஆவணத்தின்படி சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (SIPகள்), லம்ப்சம் அல்லது சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான்கள் (STPகள்) போன்றவற்றின் மூலம் இந்த ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள்
புதிய ஃபண்ட் ஆஃபர் (NFO) என்பது அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனிகள் (AMCகள்) தொடங்கும் புதிய திட்டத்திற்கு வழங்கும் முதல்முறை சப்ஸ்க்ரிப்ஷன் ஆஃபர் ஆகும். குளோஸ் எண்டட் ஃபண்ட்களிலும் இதே மாதிரிதான். NFO தொடங்கப்பட்டதும், மியூச்சுவல் ஃபண்டில் உள்ள யூனிட்டுகளை குறிப்பிட்ட விலையில் முதலீட்டாளர்கள் வாங்கலாம். NFO முடிந்ததும், புதிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாது. எனினும், முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய AMC இந்த மியூச்சுவல் ஃபண்டை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடும்.
ஒரு முதலீட்டாளராக, முதிர்வடையும் வரை இந்த முதலீட்டை நீங்கள் ஹோல்டில் வைத்திருக்கத் தேர்வுசெய்யலாம், அந்த ஃபண்டு லிக்விடேட் செய்யப்படும்போது NAV உங்களுக்கு கிடைக்கும். இதற்கு பதிலாக, அவசரமாக உங்களுக்குப் பணம் தேவையெனில் திட்டத் தகவல் ஆவணத்தின்படி இரண்டாம் நிலை மார்க்கெட்டில் உங்கள் யூனிட்டுகளை நீங்கள் விற்கலாம். குளோஸ் எண்டட் ஃபண்டுகளில் ஃபண்ட் மேனேஜர்கள் இருப்பதால் பயமில்லாமல் ஃபண்டுகளை ஒதுக்கும் நெகிழ்வுத்தன்மை கிடைத்திடும்.
3) இவற்றின் நன்மைகள் என்னென்ன?
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளின் பலன்கள்
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நன்மைகள் இதோ:
1. லிக்விடிட்டி
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் லிக்விட் நிலையில் இருப்பதால், நீங்கள் எந்தவொரு வேலை நாளிலும் யூனிட்டுகளை வாங்கலாம் விற்கலாம். உங்கள் முதலீடுகளை லிக்விடேட் செய்வதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
2. வெளிப்படைத்தன்மை
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் அவற்றின் உரிய ஆவணங்களுடன் மிகவும் வெளிப்படையாக இருக்கின்றன. எந்த மாதிரியான செக்யூரிட்டிகளில் அவை முதலீடு செய்யப்படுகின்றன, அவற்றின் முந்தைய செயல்திறன், ஃபண்ட் மேனேஜர்களின் செயல்திறன் மற்றும் பிற விவரங்களையும் நீங்கள் பார்க்கலாம். இது முதலீடு செய்வதற்கான முடிவு எடுக்க உங்களுக்கு எளிதாக இருக்கும். எனினும், முந்தைய செயல்திறனை வைத்து எதிர்கால செயல்திறனுக்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்க முடியாது, அவ்வப்போது உங்கள் முதலீடுகளை மதிப்பாய்வு செய்து கண்காணிப்பது அவசியம்..
3. முறையான முதலீட்டு விருப்பங்கள்
லம்ப்சம், SIP, STP போன்றவற்றின் மூலம் ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை இவை உங்களுக்கு வழங்குகின்றன.
4. தொழில்முறை மேலாண்மை
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளை தொழில்முறைப் பயிற்சி பெற்ற ஃபண்ட் மேனேஜர்கள் நிர்வகிக்கின்றனர், தங்கள் போர்ட்ஃபோலியோவை முனைப்புடன் தாங்களே நிர்வகிக்க முடியாதவர்களுக்கு இந்த மேனேஜர்கள் உதவுவார்கள். ஃபண்ட் மேனேஜர்கள் மார்க்கெட் நிலவரம், ஆராய்ச்சி, ஸ்கீம் ஆஃபர் ஆவணம் போன்றவற்றின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை எடுப்பார்கள். இதனால் எப்போதும் மார்க்கெட்டினை கண்காணித்துக் கொண்டே இருக்கும் சிரமங்கள் உங்களுக்கு இல்லை.
குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளின் பலன்கள்
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் லிக்விடிட்டி, வெளிப்படைத்தன்மை, முதலீட்டில் நெகிழ்வுத்தன்மை போன்ற நன்மைகள் இருப்பதுபோலவே குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளிலும் சில நன்மைகள் உள்ளன.
1. நிலைத்தன்மை
NFO முடிந்ததும் லிக்விடேட் செய்ய முடியாது என்பதால் குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் நிலையானவை எனக் கருதப்படுகின்றன. இந்த அம்சத்தால் ஃபண்ட் மேனேஜர்களிடம் ஒரு நிலையான அசெட் பேஸ் இருப்பதால், அவர்களால் சரியான முதலீட்டு உத்திகளை உருவாக்க முடியும். முதிர்வுக்காலம் வரை திருப்பியளிக்கத் தேவையில்லை/ குறைவான அளவே திருப்பியளிக்க முடியும் என்பதால் லிக்விடிட்டியைப் பராமரிப்பதும் சுலபம்தான்.
2. ஒரேமுறை செய்யும் முதலீட்டால் பலன்
குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும் இன்னொரு நன்மை என்னவென்றால், லாக்-இன் காலத்தில் முதலீடு செய்வது, முதலீட்டை எடுப்பது என்பது இருக்காது என்பதால் ஃபண்ட் மதிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்காது. இதில் உள்ள முக்கியமான நன்மை - திருப்பியளிக்கும் பிரச்சனைகள் குறைவாக இருக்கும் என்பதால் ஃபண்ட் மேனேஜர்கள் தங்கள் முதலீட்டு உத்திகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.
3. நிர்வகிப்பதில் நிபுணத்துவம்
குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளும் தொழில்முறையில் பயிற்சி பெற்ற ஃபண்ட் மேனேஜர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. லாக்-இன் காலம் இருப்பதால், ஃபண்ட் மேனேஜர்கள் லிக்விடிட்டியை நிர்வகிப்பதில் மட்டுமே மாட்டிக்கொள்வதைவிட ஃபண்ட் செயல்திறனை மேம்படுத்துவதற்கான முதலீட்டு உத்திகளைத் திட்டமிடலாம். தலைப்பு மற்றும் விளக்கத்திற்கு இடையேயான வேறுபாடு.
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் இடையே எதைத் தேர்வுசெய்யலாம்?
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்ய கவனத்தில் கொள்ள வேண்டிய காரணிகள்:
1. லிக்விடிட்டி
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக லிக்விடிட்டி கொண்டவையாக இருப்பதால், நீங்கள் விரும்பிய நேரத்தில் யூனிட்டுகளை வாங்கலாம் விற்கலாம். குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளை எக்ஸ்சேஞ்சில் நீங்கள் விற்கலாம், ஆனால் ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளைப் போல அதிகமான லிக்விடிட்டியைக் கொண்டிருக்காது.
2. கட்டணங்கள்
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளின் விலை மிக அதிகமாக இருக்கக்கூடும். எனவே கட்டணங்களும் மிக அதிகம். குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு இயல்பாகக் குறைந்த கட்டணங்களே இருக்கும். கட்டணம் உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருந்தால் முதலீடு செய்வதற்கு முன்பு ஒப்பிட்டுப் பாருங்கள்.
3. முதலீட்டுக் காலம்
ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டுக் காலம் என்பது முழுவதுமாக முதலீட்டாளர்களின் விருப்பங்கள் மற்றும் நிதி இலக்குகளைப் பொறுத்தது. குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் குறிப்பிட்ட இலக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். இவற்றை குறுகிய காலத்தில் விற்கலாம்.
4. நெகிழ்வுத்தன்மை
லம்ப்சம் முதலீடு அல்லது SIP மூலம் ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம். எனினும், குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய மிகச் சில வழிகளே உள்ளதால் அவற்றை SIP மூலமாக முதலீடு செய்யமுடியாது. லம்ப்சம் முதலீடுகளை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
எனவே, முதலீடு செய்வதற்கு மேலும் அதிக வாய்ப்புகள், அதிக லிக்விடிட்டி வேண்டும் என நினைத்தால், ஓபன் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். எப்போதும்போல மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு முன்பு போதியளவு ஆராய்ச்சி செய்து, உங்கள் முதலீட்டு இலக்குகள், ரிஸ்க்கின் அளவு போன்றவற்றைப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஸ்கீமின் ரிஸ்க்-ஓ-மீட்டரைப் பார்க்கவும். இது மார்க்கெட்டில் உள்ள பிற ஸ்கீம்களுடன் ஒப்பிட்டு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு எந்தளவு ரிஸ்க் கொண்டது என்பதைத் தெரிவிக்கும். பெஞ்ச்மார்க் ரிஸ்க்-ஓ-மீட்டரையும் பார்த்து நீங்கள் செய்ய நினைக்கும் முதலீட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதும் உதவிகரமாக இருக்கும். மேலும் தகவலறிந்த முடிவினை எடுக்க இது உங்களுக்கு உதவும்.
ஓபன் எண்டட் அல்லது குளோஸ் எண்டட் மியூச்சுவல் ஃபண்டுகள் என இவை இரண்டில் எதில் வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம், ஆனால் திட்டம் தொடர்பான விவர ஆவணங்கள் அனைத்தையும் நீங்கள் படிப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். ஏதேனும் விவரங்கள் தேவை எனில் உங்கள் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளுங்கள்.
பொறுப்புதுறப்பு
மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம்களின் பல்வேறு வகைகள் பற்றி AMFI இணையதளத்தில் உள்ள தகவலானது, ஒரு நிதித் தயாரிப்பு வகை என்ற வகையில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. விற்பனைக்காகவோ விளம்பரத்திற்காகவோ வணிக எதிர்பார்ப்பிலோ வழங்கப்படவில்லை.
இதிலுள்ள உள்ளடக்கம், பொதுவில் கிடைக்கும் தகவல்கள், உள் தகவல் ஆதாரங்கள், நம்பகமானது என்று நம்பக்கூடிய வகையிலான பிற மூன்றாம் தரப்பு ஆதாரங்கள் ஆகியவற்றில் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் AMFI உருவாக்கியது. எனினும், அத்தகைய தகவலின் துல்லியத்திற்கு AMFI உத்தரவாதம் அளிக்காது, அந்தத் தகவல் மாறாது என்றும் உறுதியளிக்காது.
இதிலுள்ள உள்ளடக்கமானது, தனிப்பட்ட ஒரு முதலீட்டாளரின் நோக்கங்கள், ரிஸ்க் எடுக்கக்கூடிய ஆர்வம் அல்லது நிதி சார்ந்த தேவைகள்/சூழல்கள் அல்லது இங்கு விவரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்புகள் அவருக்குப் பொருந்தும் தன்மை போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு வழங்கப்படவில்லை. ஆகவே, முதலீட்டாளர்கள் இது குறித்து முதலீட்டு ஆலோசனை பெற, தங்களது தொழில்முறை முதலீட்டு ஆலோசகர்/நிபுணர்/வரி ஆலோசகரிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம்.
மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் என்பது டெபாசிட் செய்யும் தயாரிப்பல்ல, இவை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது அதன் AMC-இன் பொறுப்பல்ல, மேலும் இவை மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை, காப்பீடும் வழங்குவதில்லை. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் தயாரிப்பில் உள்ள முதலீடுகளின் தன்மையின் காரணமாக, அதன் ரிட்டர்ன்கள் அல்லது சாத்தியமுள்ள ரிட்டர்ன்கள் குறித்து உத்தரவாதம் கொடுக்க முடியாது. இதுவரையான பெர்ஃபார்மன்ஸ் பற்றிய தகவல் கொடுக்கப்படும்போது, அது முழுக்க முழுக்க தகவல் தேவைக்காக மட்டும்தானே தவிர, அது எதிர்கால பலன்களுக்கான உத்தரவாதமல்ல.
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.