ஒரு வகையில், இருவருமே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட உங்கள் முதலீட்டுத் தீர்மானங்களில் உதவுவதை நோக்கமாகக் கொண்டவர்கள்தான். இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட்ஸின் தயாரிப்புகளின் மீது கவனம் கொண்டு இருப்பார். அதேசமயத்தில், முதலீட்டு ஆலோசகர் பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குறித்த அறிதலைக் கொண்டிருப்பார்.
அப்படியென்றால், முதலீட்டாளர்களுக்கு ஏதாவது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை விற்பனை செய்து கமிஷனை பெறுவதுதான் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரின் வேலையா? இந்த விஷயத்தில் ஒழுங்குமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளன. முதலீட்டாளருக்கு பொருத்தமில்லாத ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் விற்பனை செய்தால், அவர் “தவறான விற்பனையை” செய்தவராகக் கருதப்படுவார். இது ஒரு குற்றமாகும்.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் என்பவர் முதலீட்டாளரின் சூழ்நிலை/ரிஸ்க் புரொபைலை புரிந்து கொண்டு, பரிந்துரைக்கும் சமயத்தின்போது முதலீட்டாளரின் தேவைக்குப் பொருத்தமான முதலீடுகளைப் பரிந்துரை செய்யவேண்டும். அதேசமயத்தில், ஒரு முதலீட்டு ஆலோசகர் என்பவர் முதலீட்டாளரின் சொத்துக்கள், கடன்கள், வருமானம் மற்றும் செலவுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான தகவலைப் பெற்று, தயாரிப்புகளைப் பரிந்துரைப்பார்.
இந்த இருவருமே பதிவுசெய்யப்பட்ட அமைப்புகள்தான் மற்றும் ஒழுங்குமுறைபடுத்தப்பட்டவையும் கூட. முதலீட்டு ஆலோசகர்கள் நேரடியாக SEBI -யுடன் பதிவு செய்யப்பட்டிருப்பர், அதேசமயத்தில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் விநியோகஸ்தர்கள் இந்திய பரஸ்பர நிதிகள் சங்கமான AMFI -யுடன் பதிவு செய்யப்பட்டிருப்பர். இந்த AMFI என்பது மியூச்சுவல் ஃபண்ட் தொழிற்துறையின் கூட்டமைப்பு ஆகும்.