ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டால் அல்லது விற்கப்பட்டால், எந்தவொரு நடப்பு முதலீட்டாளருக்கும் அது ஒரு கவலைதரும் விஷயமாகவே இருக்கும். இருந்தாலும், மியூச்சுவல் ஃபண்ட்கள் SEBI -யால் ஒழுங்குபடுத்தப்படுவதால், இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு பரிந்துரைக்கப்பட்ட செயல்முறையாகவே இருக்கும்.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் மூடப்பட்டால், மூடப்படுவதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் பெறுவதற்காக ஃபண்டின் அறங்காவலர் குழு SEBI -ஐ அணுகவேண்டும் அல்லது SEBI -யே ஒரு ஃபண்டை மூடுவதற்கு வழிகாட்டலாம். இதுபோன்ற சமயங்களில், மூடப்படுவதற்கு முன்பு கடைசியாக இருக்கக் கூடிய நிகர சொத்து மதிப்பின் அடிப்படையில் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தொகையானது திரும்ப வழங்கப்படும்.
ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கிவிட்டால்,
மேலும் வாசிக்க