நகரத்திற்குள் நீங்கள் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, காலியான சாலையில் செல்லும்போது மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்வீர்கள், போக்குவரத்து நெரிசலோ வேகத் தடையோ உள்ள மற்ற இடங்களில் மணிக்கு 20கி.மீ. வேகத்திற்கு நீங்கள் குறைக்க வேண்டியிருக்கும். இறுதியாக, நீங்கள் எவ்வளவு அடிக்கடி வேகத்தைக் குறைப்பீர்கள் அல்லது வேகமெடுப்பீர்கள் என்பதைப் பொறுத்து சராசரியாக மணிக்கு 45 கிமீ. அல்லது 55 கி.மீ. வேகத்தில் முடிவடையும்.
நகரத்திற்குள் வாகனம் ஓட்டும்போது உங்கள் சராசரி வேகம் மிக அதிகமாகவும் இல்லை, மிகக் குறைவாகவும் இல்லை. அதுபோலவே, SIPகளின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது மார்க்கெட்டின் ஏற்றத்திலும் இறக்கத்திலும் சுமூகமாகச் செல்ல முடியும். மார்க்கெட் எப்போது எப்படி