ஏற்ற இறக்கம் உள்ள சந்தையில் SIP மூலம் ஏன் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்?

Video

மார்க்கெட் நிலையற்ற தன்மை அடையும்போது முதலீட்டாளர்கள் பலர் தங்களது முதலீட்டு முடிவுகள் குறித்து சந்தேகப்பட்டு, தங்கள் SIPகளை நிறுத்துவது குறித்தோ முதலீடுகளை வித்ட்ரா செய்வது குறித்தோ யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். ஏற்ற இறக்கம் கொண்ட மார்க்கெட் நிலவரத்தில் உங்கள் முதலீடுகள் சிவப்பு நிறத்தில் இருப்பதைப் பார்க்கக் கவலையாக இருக்கும்தான். ஆனால், மார்க்கெட் வீழ்ச்சியடையும் சமயத்தில் உங்கள் SIP முதலீடுகளை நிறுத்துவது நல்ல முடிவல்ல, ஏனெனில் அதே மாதாந்திர முதலீட்டுத் தொகைகளில் நீங்கள் கடைசியில் அதிக யூனிட்டுகளை வாங்கியிருப்பீர்கள்.  காய்கறிக்கடையாக இருந்தாலும் ஆன்லைன் ஷப்பிங்காக இருந்தாலும் பேரம்பேசுவது நம் இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று,  இல்லையா! அப்படியானால் விலைகள் குறையும்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலும் ஏன் அதேபோல்  பேரம்பேசக் கூடாது?!

வானிலையைவிட மார்க்கெட் கணிக்க முடியாததாக உள்ளது. மார்க்கெட் வீழ்ச்சியடையும்போது அதிகத் தொகையை கச்சிதமான நேரத்தில் சரியாக முதலீடு செய்வது மிகக்கடினம். நீங்கள் முதலீடு செய்த பிறகு மார்க்கெட் இன்னும் கீழிறங்கினால் என்ன ஆகும்? அதேபோல், மார்க்கெட் சரியாக உயர்வில் இருக்கும் நேரத்தில் கச்சிதமாக விற்பனை செய்வதும் முடியாது. ஏனெனில், நீங்கள் விற்ற பிறகு மார்க்கெட் இன்னும் உயரலாம். மார்க்கெட் போகும் போக்கிற்கு ஈடுகொடுக்க முயற்சித்தால், கடைசியில் வருத்தமே மிஞ்சும். நேரம் தவறுவதால் ரிட்டர்ன்ஸும் பாதிக்கப்படலாம். ஆகவே தெளிவான கவனத்துடன் இலக்குகளைக் கருத்தில் கொண்டு   மார்க்கெட் ஏறும்போதும் இறங்கும்போதும் SIP மூலம் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே நல்லது. நீண்ட கால அளவில் பார்க்கும்போது உங்கள் முதலீட்டுத் தொகையானது சராசரியாகவே இருக்கும் எனபதால், மார்க்கெட் ஏற்ற இறக்கம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. 

343
478

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?