சில முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இறங்குகின்றனர். அவர்கள் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் இருந்தே முதலீடு செய்யத் தொடங்கியிருப்பார்கள். சிலர் பணி ஓய்வுக் காலத்தை நெருங்கிக்கொண்டு இருப்பார்கள், அல்லது பணி ஓய்வுக் காலத்தின்போது பிற வருமானத்துடன் கூடுதல் வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்குக் கிடைத்த பணிஓய்வு முதிர்வுத் தொகையை முதலீடு செய்ய விரும்புவார்கள். இந்த இரண்டு வெவ்வேறு விருப்பம் உள்ளவர்களுக்கென்று மியூச்சுவல் ஃபண்ட்களில் இரண்டு வழிகள் உள்ளன.
குரோத் ஆப்ஷன் என்பது, ஃபண்டில் கிடைக்கும் இலாபங்களை மீண்டும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்து செல்வத்தை எதிர்காலத்திற்காகப் பெருக்கும், ஃபண்டின் மதிப்பையும்
மேலும் வாசிக்க