மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து என்ன மாதிரியான ரிட்டர்ன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம்?

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் இருந்து ஒருவர் என்ன வகையான ரிட்டர்ன்ஸை எதிர்பார்க்கலாம்?

இந்தக் கேள்வியைக் கற்பனை செய்து பாருங்கள் வாகனங்கள் என்ன வேகத்தில் ஓடும்?

உங்களால் பொதுவான ஒரு பதிலைக் கூற முடியுமா? வெவ்வேறு வாகனங்கள் வெவ்வேறு வேகத்தில் ஓடும் - கார்கள் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, நகரத்திலுள்ள சாலைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கார்கள் குறிப்பிட்ட அதிகபட்ச வேகத்தில் செல்லலாம், ரேஸிங்குக்காக வடிவமைக்கப்பட்ட கார்கள் வேறு வேகத்தில் செல்லலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு தயாரிப்பு இல்லை. மியூச்சுவல் ஃபண்ட்ஸில் பல வகைகள் உள்ளன. வெவ்வேறு வகைகளில் இருந்து பெறக்கூடிய முதலீட்டு ரிட்டர்ன்கள் மாறுபடும் மற்றும் சில வகை ஃபண்ட்கள் மிக அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.

ஒரு சந்தையில் முதலீடு செய்யப்பட்ட நிதி, நிறைய ஏற்ற இறக்கத்துடன் இருந்தால், அதன் NAV -யும் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் (உதாரணத்திற்கு, ஈக்விட்டி மார்க்கெட்டில் முதலீடு செய்யப்படும் குரோத் ஃபண்ட்ஸ்); இருந்தாலும், விலையில் ஏற்ற இறக்கம் இல்லாத ஒரு சந்தையில் அந்த நிதி முதலீடு செய்யப்பட்டால், அதன் NAV ஓரளவு நிலையாக இருக்கும் (உதாரணத்திற்கு, மணி மார்க்கெட்டில் முதலீடு செய்யப்படும் லிக்விட் ஃபண்ட்ஸ்). வேறு விதமாகக் கூறவேண்டுமானால், ஈக்விட்டி ஃபண்டுடன் ஒப்பிடும் போது, லிக்விட் ஃபண்ட்டின் ஏற்ற இறக்கம் குறைவாகவே இருக்கும்.

ஃபண்டின் அம்சங்களின் மீது கவனம் கொண்டு, தனது தேவைகளுடன் பொருந்துகின்ற ஒரு ஃபண்டை தேர்ந்தெடுக்குமாறு முதலீட்டாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

348

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?