மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலதன இலாபங்கள் வரிக்கு உட்பட்டவை. அது நமது மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடுகளை (யூனிட்கள்) பணமாக்கும் போது/ விற்கும்போது நாம் பெறுகின்ற இலாபத்தின் மீது செலுத்தப்படுகிறது. இலாபம் என்பது விற்பனை தேதி மற்றும் வாங்கிய தேதியிலான திட்டத்தின் NAV மதிப்புக்கு இடையேயான வேறுபாட்டைக் குறிக்கிறது (விற்பனை விலை - வாங்கிய விலை). முதலீட்டைத் தக்க வைக்கும் காலத்தைப் பொறுத்து மூலதன இலாபங்கள் வரி மேலும் வகைப்படுத்தப்படுகிறது. ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு (ஈக்விட்டி வெளிப்பாடு > =65% கொண்ட பங்குகள்), ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் முதலீட்டைத் தக்கவைப்பது நீண்டகாலம் என்று கருதப்படுகிறது மற்றும் இது நீண்டகால
மேலும் வாசிக்க