- வைத்திருக்கும் காலம்:
- 12 மாதங்களுக்கும் குறைவு: குறுகிய காலம்
- 12 மாதங்கள் அல்லது அதற்கு மேல்: நீண்ட காலம்
- வரி விகிதங்கள்:
- குறுகிய கால கேப்பிட்டல் கெயின்கள் (STCG): 20%
- நீண்ட கால கேப்பிட்டல் கெயின்ஸ் (LTCG): INR 1.25 லட்சம் வரை விலக்களிக்கப்படுகிறது, அதற்கு மேல் உள்ள தொகைக்கு 12.5% வரி விதிக்கப்படும்.
ஈக்விட்டி அல்லாத ஃபண்டுகள் (டெப்ட் ஃபண்டுகள்):
- வைத்திருக்கும் காலம்:
- 36 மாதங்களுக்கும் குறைவு: குறுகிய காலம்
- 36 மாதங்கள் அல்லது அதற்கு மேல்: நீண்ட காலம்
- வரி விகிதங்கள்
- குறுகிய கால கேப்பிட்டல் கெயின்கள்: நபரின் வருமானத்திற்கு ஏற்ற வரிப் பிரிவின்படி வரி விதிக்கப்படும்
- நீண்ட கால கேப்பிட்டல் கெயின்கள்: இன்டெக்சேஷன் பலன்களுடன் 12.5%
வரி விகிதங்களும் வைத்திருக்கும் காலங்களும் சமீபத்திய ஒழுங்குமுறைகளின்படி புதுப்பிப்பட்டுள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். உதாரணமாக, ஈக்விட்டி ஃபண்டுகளின் மீதான LTCG வரி விகிதம் 10% இல் இருந்து 12.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது, விலக்கு வரம்பும் INR 1 இலட்சத்தில் இருந்து INR 1.25 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 31 ஜனவரி 2018-க்கு பிறகு செய்யப்பட்ட முதலீடுகள் அனைத்துக்கும் இந்த மாற்றங்கள் பொருந்தும்.
ஈக்விட்டி அல்லாத ஃபண்டுகளுக்கு, LTCG வரி விகிதம் 20% இல் இருந்து 12.5% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது, இன்டெக்சேஷன் பலன்கள் தொடரும். 36, மாதங்களுக்கும் குறைவான காலம் கொண்ட ஹோல்டிங்குகளில் கிடைக்கும் லாபங்கள் STCG வரிக்கு உட்பட்டவை. அவை நபரின் வருமான வரிப் பிரிவிற்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.
முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தொடர்பாக நிதிசார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு, இந்தப் புதுப்பிக்கப்பட்ட வரி விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முதலீட்டு போர்ட்ஃபோலியோக்களை இந்த மாற்றங்கள் எப்படி பாதிக்கும் என்று புரிந்துகொள்ள வரி நிபுணர் அல்லது நிதி ஆலோசகரிடம் பேசுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும். ஸ்கீம்களின் நெட் அசெட் வேல்யூக்கள் (NAVs) மார்க்கெட் நிலவரங்களுக்கு ஏற்ப ஏறி இறங்கலாம்.