ஒரு வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் (FD) உங்கள் பணத்தை போட்டு வைக்கும் போது, அதற்கு பிரதிபலனாக ஒரு நிலையான வட்டியை வழங்குவதாக வங்கி உறுதியளிக்கிறது. இங்கு உங்கள் தொகையை வங்கிக்கு கடனாகக் கொடுக்கிறீர்கள். இதில் வங்கியானது உங்கள் பணத்தை வாங்கும் கடனாளி. எனவே உங்களுக்கு ஒரு நிலையான கால இடைவெளியில் வட்டியைக் கொடுப்பதற்கு அது கடமைப்பட்டிருக்கிறது. டெப்ட்ஃபண்ட்கள், அரசாங்கப் பத்திரங்கள், நிறுவன பாண்டுகள், பணச் சந்தை செக்யூரிட்டிகள் போன்ற டெப்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும். இந்த பாண்டுகள், மின்சக்தி நிறுவனங்கள், வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் போன்றவற்றால் வழங்கப்படுகின்றன. இந்த பாண்டுகளை வழங்குபவர்கள் தங்களது பாண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு எதிராக, முதலீட்டாளர்களுக்கு (பாண்டுகளை வாங்குபவர்கள்) ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியை வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கிறார்கள்.
நமது FD உதாரணத்தில் உள்ள வங்கியைப் (கடனாளி) போன்று, பாண்டுகளை வழங்கும் நிறுவனங்கள், தங்களது முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வட்டியை வழங்கிட வாக்குறுதியளிக்கிறார்கள். வங்கியின் FDயில் நீங்கள் முதலீட்டாளராக இருப்பதைப் போன்று, டெப்ட் ஃபண்ட்கள், இந்த பாண்டுகளின் முதலீட்டாளர்களாக இருப்பார்கள். நீங்கள் ஒரு FDயில் இருந்து வட்டியைப் பெறுவதைப் போன்று, டெப்ட்ஃபண்ட்களின் போர்ட்ஃபோலியோவில் இருந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் வட்டியைப் பெறுவீர்கள். முதலீட்டாளருக்கு FDயில் கொடுக்கப்படும் வட்டிவீதம் நிலையானது. ஆனால், இந்த பாண்டுகளில் இருந்து டெப்ட் ஃபண்ட்களுக்கு, ஒரு கால இடைவெளியில் கிடைக்கும் வட்டி வருவாய் எந்தவித உத்தரவாதமும் இன்றி நிலையானதாகவோ அல்லது மாறுபடக்கூடியதாகவோ இருக்கும். முதலீட்டாளர்கள் தங்களின் போர்ட்ஃபோலியோவில் உள்ள பாண்டுகளை விற்கும் போது, அவர்கள் அசல் தொகையைத் திரும்பப் பெற்றிடுவர். அதே சமயம், டெப்ட் ஃபண்ட்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது, வெவ்வேறு பாண்டு வழங்குநர்களிடம் ரிஸ்க்கை பரவச் செய்து, நீங்கள் மறைமுகமாக அதன் பல்வேறு பாண்டு போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வீர்கள். இதுபோன்ற ரிஸ்க் பலவகைப்படுத்தலில் இருந்து நீங்கள் பலனடைவீர்கள்.