மியூச்சுவல் ஃபண்டு என்பது ஒரு பொதுவான முதலீட்டு இலக்கைக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைச் சேகரிக்கிறது. இப்படி சேகரித்த பணம் பிறகு அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி (AMC) என்றழைக்கப்படும் ஒரு நிறுவனத்தால், பாண்டுகள், ஸ்டாக் மற்றும் பிற செக்யூரிட்டிகளைக் கொண்ட ஒரு டைவர்ஸிஃபை செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்யப்படுகிறது. ரிஸ்க்கையும் ரிவார்டுகளையும் எதிர்கொண்டு முதலீட்டாளர்களுக்காக நல்ல லாபத்தை வரவழைக்க வேண்டும் என்பதே AMC-இன் குறிக்கோளாக இருக்கிறது. ஆனால் மியூச்சுவல் ஃபண்டின் வரலாறு என்ன?
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய விரிவான வரலாறு
இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளின் வரலாறு
மியூச்சுவல் ஃபண்டு என்ற கருத்தாக்கம் உருவானதில் இருந்து, முதலீட்டை அதிகரிப்பதற்காக இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு துறை பல்வேறு மேம்பாடுகளை அடைந்துள்ளது. இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டின் வரலாற்றின் சுருக்கம் இதோ:
> முதல் கட்டம் (1964 – 1987)
1963-இல் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) நிறுவப்படும்போது இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டின் வரலாறு தொடங்குகிறது.
சேமிப்பு, முதலீடு, செக்யூரிட்டிகளில் இருந்து வருமானம் மற்றும் லாபங்களில் பங்கேற்பது ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இந்திய அரசாங்கம் இந்திய ரிசர்வ் வங்கியுடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை உருவாக்கியது. இந்தக் காலகட்டத்தில் UTI சிறப்பாகச் செயல்பட்டது, 1964-இல் தனது முதல் ஸ்கீமை வழங்கியது. அந்த ஸ்கீம் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமுள்ள ரிட்டர்ன்களை வழங்கி சிறு முதலீட்டாளர்களை மார்க்கெட்டை நோக்கி ஈர்த்தது.
> 2வது கட்டம் (1987 – 1993)
இந்தக் காலகட்டத்தின் போது பொதுத்துறை வங்கிகளும் பல்வேறு நிதி நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்டில் நுழைந்தன. 1987-இல் SBI மியூச்சுவல் ஃபண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் அதுதான் UTI அல்லாத முதல் மியூச்சுவல் ஃபண்டு ஆகும். இந்தக் காலகட்டத்தில் UTI நிறுவனமும் பிற மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களும் புதிய ஸ்கீம்களை அறிமுகப்படுத்தின, இதனால் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு தெரிவுகள் கிடைத்தன.
> 3வது கட்டம் (1993 – 2003)
1993-இல் தனியார் நிறுவனங்களையும் மியூச்சுவல் ஃபண்டு துறையில் அனுமதித்தது ஒரு முக்கியமான மைல் கல்லாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக சில தனியார் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள் (AMCகள்) உருவாக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களிடையே கடுமையான போட்டியும், துறையில் வேகமான வளர்ச்சியும் இருந்தது. 1993-இல் SIP அறிமுகப்படுத்தப்பட்டது, அது முதலீட்டு உத்தியை மாற்றியதோடு சில்லறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை இன்னும் முறைப்படுத்தியது, சாத்தியமாக்கியது.
> 4வது கட்டம் (பிப்ரவரி 2003 - ஏப்ரல் 2014)
2023 பிப்ரவரியில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா சட்டம் 1963 ரத்துசெய்யப்பட்டது, அப்போது UPI இரண்டு நிறுவனங்களாகப் பிரிந்தது: SUUTI (ஸ்பெசிஃபைடு அண்டர்டேக்கிங் ஆஃப் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா) மற்றும் SEBI ஒழுங்குமுறைகளின் கீழ் இயங்கும் UTI மியூச்சுவல் ஃபண்டு. 2099-இல் பொருளாதாரத் தேக்க நிலைக்குப் பிறகு, உலகெங்கும் பங்குச் சந்தைகள் சரிந்தன. மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது மார்க்கெட்டில் நுழைந்த பலர் அதிக நஷ்டங்களைச் சந்தித்தார்கள், இதனால் மியூச்சுவல் ஃபண்டுகளின் மீது நம்பிக்கை குறைந்தது. SEBI நுழைவுக் கட்டணத்தை அகற்றியதும், பொருளாதாரத் தேக்கநிலையின் தாக்கங்களும் சேர்ந்து மியூச்சுவல் ஃபண்டு துறையை மேலும் பாதித்தன. இதன் விளைவாக இந்தத் துறை மீண்டு எழ மிகவும் போராடிய வேண்டி இருந்ததால் 2010 முதல் 2013 வரை மேனேஜ்மென்ட்டின் கீழ் இருந்த (AUM) அசெட்டுகளின் வளர்ச்சி மிக மெதுவாக இருந்தது.
> 5வது கட்டம் (தற்போது - மே 2014 முதல்)
மியூச்சுவல் ஃபண்டுகள் குறைந்த அளவே மக்களைச் சென்று அடைந்ததையும், பங்குதாரர்களின் ஆர்வங்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு, இந்திய மியூச்சுவல் ஃபண்டு துறையை மீண்டும் புத்துணர்ச்சி பெற வைப்பதற்காக SEBI சில நடவடிக்கைகளை எடுத்தது. எதிர்மறையாகச் சென்று கொண்டிருந்த போக்கை திசை மாற்றி நேர்மறையாகக் கொண்டு செல்வதில் இந்த நடவடிக்கைகள் வெற்றியடைந்தன. புதிய அரசாங்கம் அமைந்த பிறகு இன்னும் முன்னேற்றம் ஏற்பட்டது. 2014 மே மாதம் முதல் இந்தத் துறை தொடர்ச்சியாக சீரான முன்னேற்றத்தைக் கொண்டிருந்தது, அதோடு அது நிர்வகிக்கும் அசெட்டுகளின் எண்ணிக்கையும் முதலீட்டாளர் கணக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது.
அந்த சில ஆண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்களைப் பிரபலமாக்குவதில் மியூச்சுவல் ஃபண்டு டிஸ்ட்ரிபியூட்டர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. 2016 ஏப்ரல் மாதத்தில் SIP கணக்குகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. 2024 ஆகஸ்ட் வாக்கில் இந்தியாவில் சுமார் 9.61 கோடி SIP கணக்குகள் உள்ளன.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.