தொலைவில் இருக்கக்கூடிய வேறு ஒரு நாட்டுக்கு நீங்கள் பயணிக்க வேண்டும். அதற்கு விமானத்தில் சென்றால் மட்டுமே முடியும் என்று வைத்துக்கொள்வோம்.
விமானத்தில் பறப்பதற்கான பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமா? அல்லது வெவ்வேறு கட்டுப்பாட்டுக் கோபுரங்களில் இருந்து பைலட் பெறுகின்ற சிக்னல்களை புரிந்துகொள்ள வேண்டுமா? அல்லது ரேடியோ சிஸ்டமை எப்படி இயக்க வேண்டும் என்று புரிந்துகொள்ள வேண்டுமா?
நீங்கள் ஒரு பைலட் அல்லது கோ-பைலட்டாக இருந்தாலொழிய, இவற்றை அறிந்துகொள்ள வேண்டியதில்லை. பயணியாக இருக்கும் பட்சத்தில், உங்கள் தேவைகள் பூர்த்தியடைந்ததா என்பதை மட்டுமே நீங்கள் புரிந்துகொண்டால் போதுமானது. மேலும் முதலில் உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முதலீடு என்று வரும்போது, நீங்களே உங்கள் முதலீடுகளை நிர்வகிக்க வேண்டிய நிலையில், ஸ்டாக், பாண்டு மற்றும் பணச் சந்தைகள் குறித்து நீங்கள் புரிந்துகொள்ளத் தேவையிருக்கலாம். எனினும், உங்கள் நிதி இலக்குகளை அடையும் நோக்கத்துக்காக மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்யத் தீர்மானிக்கும் பட்சத்தில், ஸ்டாக்குகள், பாண்டு மற்றும் பணச் சந்தைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்துகொள்ளத் தேவையில்லை. என்னென்ன வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் என்னென்ன வகையான நோக்கங்களைப் பூர்த்தி செய்யும் என்பதை மட்டும் அறிந்தால் போதுமானது.
மியூச்சுவல் ஃபண்ட்ஸை பயன்படுத்திடுங்கள் மற்றும் நிபுணத்துவ நிதி மேலாண்மைக் குழுவிடம் வாகனத்தின் கட்டுப்பாடுகளை ஒப்படைத்திடுங்கள். உங்கள் பயணத்தின் அடிப்படையில் வாகனத்தைத் தேர்ந்தெடுத்து, ஓய்வாக இருங்கள்.