மியூச்சுவல் ஃபண்ட்ஸில் எவ்வாறு முதலீடு செய்வது, என்று நீங்கள் நினைத்தால் , உங்களுக்கு ஏதேனும் ஒரு வங்கியில் வங்கிக் கணக்கு, KYC / CKYC, PAN மற்றும் ஆதார் அட்டை இருக்க வேண்டியது கட்டாயமானது. சில நேர்மையற்ற முதலீட்டாளர்களால், பணமோசடிக்காக மியூச்சுவல் ஃபண்ட்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சில மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் வங்கிகளுக்கு பொதுவான தாய் நிறுவனம் உள்ளது. அதாவது, அவை இரண்டும் ஒரே கார்ப்பரேட் குழுமத்தைச் சார்ந்து இருக்கலாம். எனினும், வங்கிகளை RBI அமைப்பும், மியூச்சுவல் ஃபண்ட்களை SEBI அமைப்பும் ஒழுங்குபடுத்துகிறது. பிரபலமான ஒரு வங்கியின் பிராண்டு பெயரைக் கொண்ட ஒரு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தை நீங்கள் அணுகினால், அவை இரண்டுமே தனித்தனியாக செயல்படுகின்ற வெவ்வேறு நிறுவனங்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு வங்கியின் துணை நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதற்கு, உங்களுக்கு அந்த வங்கியில் சேவிங்க்ஸ் கணக்கு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
வங்கிகளும் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட்ஸின் விநியோகஸ்தர்களாக செயல்பட்டு, தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஃபண்ட்களை விற்பனை செய்கின்றன. அவர்கள் சந்தையில் கிடைக்கின்ற எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களையும் விற்பனை செய்யாமல் இருக்கலாம் மற்றும் தாங்கள் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனங்களின் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் உள்ள ஃபண்ட்களை பரிந்துரைத்திடுவர். இந்த மியூச்சுவல் ஃபண்ட்களை விற்பனை செய்கின்ற, நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியுடன் தொடர்பற்ற மியூச்சுவல் ஃபண்ட்களிலும் உங்களால் முதலீடு செய்ய முடியும்.