ஒருவரின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி முதலீடு செய்வதுதான் என்று தெரிந்தும், பலர் வாழ்வின் பெரும்பகுதி காத்திருந்துவிட்டு காலம் கடந்த பிறகு முதலீடு செய்யத் தொடங்குவார்கள். முதல் முறை வேலைக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் தங்கள் எதிர்காலத்திற்குத் திட்டமிடாமல் தங்கள் வாழ்க்கை முறையை இன்னும் உயர்த்துவதற்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். தங்கள் வாழ்வின் பிற்பகுதிவரை அவர்கள் முதலீடே செய்யத் தொடங்குவதில்லை என்று கூறலாம்.
தாமதமானாலும் கூட முதலீடு செய்யத் தொடங்குவது நல்லதுதான். ஆனாலும் முன்கூட்டியே தொடங்குவதால் பல நன்மைகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இளம் வயதில் முதலீடு செய்யத் தொடங்குபவர்களுக்கு பணத் தேவைக்கான பொறுப்புகள் குறைவாக இருக்கும் என்பதால், வாழ்வின் பிற்பகுதியில் முதலீடு செய்பவர்களைவிட
மேலும் வாசிக்க