மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்டகாலம் இருக்கின்றனவா?

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் நீண்டகாலமாக உள்ளதா?

உலகளவில் கடந்த சில காலமாகவே, பல்வேறு வகைகளில் தொகுப்பான மற்றும் ஒன்றுதிரட்டப்பட்ட முதலீடுகள் இருந்து வருகின்றன. நாம் அறிகின்ற இந்த மியூச்சுவல் ஃபண்ட்ஸானது, 1924- ஆம் ஆண்டு, மசாசூட்ஸ் முதலீட்டாளர்கள் அறக்கட்டளை உருவாக்கப்பட்டதில் இருந்து உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் தொழிற்துறையின் வளர்ச்சி என்பது, மூன்று பரந்த நடைமுறைகளை அடிப்படையாக கொண்டிருந்தது:

  1. நிர்வாகத்தின் கீழான சொத்துக்களில் ஈர்க்கத்தக்க வளர்ச்சியால் - அதிக முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்தனர்.
  2. கடுமையான ஒழுங்குமுறை - முதலீட்டாளரின் பாதுகாப்பையும், நிதி நிர்வாகத் துறையின் முறையான கண்காணிப்பையும் உறுதி செய்தது.
  3. பல்வேறு புதிய திட்டங்களின்அறிமுகம் - வெவ்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்;  நீண்டகால ஓய்வுத் திட்டமிடல்  முதல்   குறுகியகால பண நிர்வாகம்SW வரை பொருந்தமான பல திட்டங்கள்.

1963- ஆம் ஆண்டில் யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (UTI) நிறுவப்பட்டதிலிருந்து, இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இருந்து வருகிறது. இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் UTI அமைக்கப்பட்டது. 1964- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட யூனிட் திட்டம் 64, இந்தியாவின் முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும்.

1987-ஆம் ஆண்டில், மியூச்சுவல் ஃபண்ட்களை தொடங்குவதற்கு பிற பொதுத்துறை வங்கிகள் மற்றும் அமைப்புகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. 1993-ஆம் ஆண்டில் தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, தனியார் துறையும், மற்றும் பன்னாட்டு பங்கேற்பு அமைப்புகளும் மியூச்சுவல் ஃபண்ட்களை தொடங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

இது,மியூச்சுவல் ஃபண்ட் தொழிற்துறை மிகவேகமாக விரிவடைவதையும், நிபுணத்துவம் அடைவதையும் மற்றும் பிரபலமடைவதையும் உறுதி செய்தது. மார்ச் 31, 2016 -ஆம் ஆண்டில், இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு ரூ 37.7 இலட்சம் கோடியைத் தாண்டியது.

346

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?