டெப்ட் ஃபண்ட்கள், கார்ப்பரேட் அல்லது அரசாங்க பாண்டுகள் மற்றும் பணச் சந்தை சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்யும். இந்த செக்யூரிட்டிகள், பொதுவாக வழக்கமான கால இடைவெளிகளில் ஒரு நிலையான வட்டியையும் (கூப்பன் விகிதம்) மற்றும் முதிர்வின் போது, முதலீடு செய்யப்பட்ட (அசல்) தொகையையும் வழங்கக்கூடிய வட்டி சார்ந்த பத்திரங்கள் ஆகும். வட்டி வீத மாற்றங்கள், இந்த செக்யூரிட்டிகளின் விலைகளை நேரடியாகப் பாதிக்கக்கூடியவை. பாண்டுகளின் விலையும், வட்டி வீதங்களும் எதிர்மாறான விகிதாச்சாரம் கொண்டவை.
தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட (முக மதிப்பு) விலையில் பாண்டு வழங்கப்படும்போது, பாண்டின் கூப்பன் விகிதம் நிர்ணயிக்கப்படும். கூப்பன் விகிதத்தை விட, வட்டி வீதங்கள் குறைந்தால்,
மேலும் வாசிக்க