மியூச்சுவல் ஃபண்ட்கள் நெகிழ்த்தன்மை கொண்ட முதலீடாகும். அசெட் வகைகள், ரிஸ்க்குகள், முதலீடு செய்யும் தொகை, லிக்விடிட்டி போன்றவற்றில் பலதரப்பட்ட விருப்பங்களை அவை வழங்குவதே இதற்குக் காரணம். ஆனால் முதன் முதலில் முதலீடு செய்யும் ஒருவருக்கு, மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதற்கான முதல் படி எடுத்து வைப்பது சவாலாக இருக்கலாம். சில அடிப்படை வழிகாட்டல்களை மனதில் கொண்டு நீங்கள் உங்களது மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்கலாம்.
உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை உருவாக்க படிப்படியான வழிகாட்டி:
- உங்கள் ரிஸ்க் தாங்கும் திறனைப் புரிந்துகொள்ளுங்கள்: ரிஸ்க் தாங்கும் திறன் என்பது, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது நீங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள் என்ற அளவாகும். முதலீடுகளுக்காக நீங்கள் எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதை முடிவு செய்யும்போது, உங்களுக்கு எந்தெந்த வகை ஃபண்ட்கள் பொருத்தமாக இருக்கும் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம். உதாரணமாக, அதிக ரிஸ்க் தாங்கும் திறன் உங்களுக்கு இருந்தால், முதலீட்டின் அதிகபட்சப் பங்கை ஈக்விட்டிகளுக்கு ஒதுக்கலாம். நீங்கள் ரிஸ்க்கை விரும்பாத முதலீட்டாளராக இருந்தால் டெப்ட் ஃபண்ட்களே உங்களுக்கு மிகவும் பொருத்தமானவையாக இருக்கும்.
- இலக்குகளை அறிந்துகொள்ளுதல்: இலக்குகள் மிகவும் முக்கியம். ஏனென்றால் எதிர்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாமே இலக்குகளை அடிப்படையாக வைத்தே இருக்கும். இலக்குகளைப் பொறுத்து, எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எவ்வளவு காலம் முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் முதலீடு தொடர்பான பிற விஷயங்களையும் நீங்கள் முடிவு செய்யலாம். அதோடு, உங்கள் ஒவ்வொரு இலக்குக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகளை வைத்திருக்கும்போது, ஒவ்வொரு இலக்குக்கும் ஒரு ஃபண்ட் என்று வைத்துக்கொள்ள முடியும்.
- உங்கள் ஃபண்ட்களைத் தேர்வு செய்யுங்கள்: உங்கள் நிதி இலக்குகளையும் ரிஸ்க் தாங்கும் திறனையும் நீங்கள் தெரிந்துகொண்டதும், இந்த வரம்புகளுக்குள் பொருத்தமான ஃபண்ட்களை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
- அசெட் ஒதுக்கீடு: உங்கள் முதலீடுகளின் அசெட் ஒதுக்கீடு அல்லது பல்வேறு அசெட் வகைகளுக்கு இடையே டைவர்சிஃபை செய்வது என்பது, உங்கள் போர்ட்ஃபோலியோவை சமநிலையில் வைத்திருக்க முக்கியமாகும். முதலீடுகள் ஈக்விட்டி ஃபண்ட்கள், டெப்ட் ஃபண்ட்கள், ஹைப்ரிட் ஃபண்ட்கள் போன்ற பல வகை ஃபண்ட்களில் பரவலாக இருக்கும்போது அது நல்ல சமநிலை கொண்ட ஒரு போர்ட்ஃபோலியோ என்று கருதப்படும். வெவ்வேறு அசெட் வகைகள் மார்க்கெட்டின் நிலைகளைப் பொறுத்து வெவ்வேறு விதமாக செயல்படும் என்பதாலும், ரிஸ்க் டைவர்சிஃபை செய்யப்படுவதை உறுதிசெய்வதாலும் இது மிகவும் முக்கியமாகும்.
- கண்காணியுங்கள், ஆய்வு செய்யுங்கள், மீண்டும் பேலன்ஸ் செய்யுங்கள்: உங்கள் முதலீடுகளைக் கண்காணித்து, ஆய்வு செய்து, மீண்டும் பேலன்ஸ் செய்வது இறுதிப் படியாகும்; இந்தக் கட்டத்தில் நீங்கள் உங்களுடைய முதலீடுகளை மறுஆய்வு செய்து டைவர்சிஃபிகேஷன், முதலீடு செய்யும் கால இடைவெளி, அசெட்டுகளை மீண்டும் பேலன்ஸ் செய்தல் போன்ற விஷயங்களைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்கள் எப்படிச் செயல்படுகின்றன என்று நீங்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம், அதிக காலம் அவை சரியாகச் செயல்படாமல் இருந்தால், இன்னும் சிறந்த வேறு ஃபண்ட்களுக்கு நீங்கள் மாறலாம்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.
285