பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி உங்கள் கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்ட்டை எப்படிப் பெறுவது என்பதை இங்கே பார்க்கலாம்:
மியூச்சுவல் ஃபண்டு ஹவுஸ்கள்
ஒரு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் போர்ட்டலில் உங்கள் கேப்பிட்டல் கெயின்ஸ் ஸ்டேட்மெண்ட்டைப் பார்க்க:
> உங்கள் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
> உங்களுடைய பயனர் ஐடி அல்லது ஃபோலியோ எண் கொண்டு உள்நுழையவும்.
> உங்கள் கேப்பிட்டல் கெயின்ஸ் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்யவும்
CAMS போர்ட்டல்
CAMS மூலம் உங்கள் கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்ட்டை அணுகுவதற்கு:
> www.camsonline.com தளத்திற்குச் சென்று, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.
> ‘முதலீட்டாளர்களுக்கான சேவைகள்’ என்பதற்குச் சென்று ஸ்டேட்மெண்ட் என்பதன் கீழ் ‘மேலும் காட்டு’ என்பதைக் கிளிக் செய்யவும்.
> கேப்பிட்டல் கெயின்/லாஸ் ஸ்டேட்மெண்ட்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
> உங்களுடைய PAN மற்றும் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொண்டு படிவத்தை நிரப்பவும்.
> உங்களுக்கு வேண்டிய நிதி ஆண்டுகளைத் தேர்வு செய்யவும் (அதிகபட்சம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளைத் தேர்வு செய்யலாம்).
> அதில் தோன்றும் பட்டியலில் இருந்து உங்களுடைய மியூச்சுவல் ஃபண்டு ஹோல்டிங்குகளைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது எல்லா ‘மியூச்சுவல் ஃபண்டுகளும்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
> ‘என்கிரிப்ஷன் செய்த இணைப்பாக மின்னஞ்சல் மூலம் அனுப்பு’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
> இணைப்புக் கோப்பிற்கு ஒரு கடவுச்சொல்லை அமைத்து படிவத்தை சமர்ப்பிக்கவும்.
> என்கிரிப்ஷன் செய்த செய்த PDF ஸ்டேட்மெண்ட்டை உங்கள் மின்னஞ்சலில் பெறுவீர்கள், நீங்கள் அமைத்த அந்தக் கடவுச்சொல்லைக் கொண்டு அதை நீங்கள் அணுகலாம்.
KFintech போர்ட்டல்
Karvy மூலம் உங்கள் கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்ட்டை அணுகுவதற்கு:
> https://mfs.kfintech.com/mfs/தளத்திற்குச் செல்லவும்.
> ட்ராப் டவுன் மெனுவில் இருந்து ‘ரீட்டெயில் இன்வெஸ்டர்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
> ‘இன்வெஸ்டர் ஸ்டேட்மெண்ட் மற்றும் ரிப்போர்ட்’ என்பதற்குச் சென்று ‘கேப்பிட்டல் கெயின்ஸ் ஸ்டேட்மெண்ட்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
> ‘ஒருங்கிணைக்கப்பட்ட கேப்பிட்டல் ஸ்டேட்மெண்ட்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
> படிவத்தில் விவரங்களை நிரப்பி, நீங்கள் விரும்பும் நிதி ஆண்டுகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் மியூச்சுவல் ஃபண்டு ஹோல்டிங்குகளைத் தேர்வு செய்து, என்கிரிப்ஷன் செய்த இணைப்புக் கோப்பாக மின்னஞ்சல் மூலம் பெறுவதற்குத் தேர்வு செய்யவும், பிறகு கடவுச்சொல்லை அமைத்து சமர்ப்பிக்கவும்.
> உங்கள் கோரிக்கை செயலாக்கப்பட்டதும் மின்னஞ்சலில் ஸ்டேட்மெண்ட்டைப் பெறுவீர்கள்.
ஆன்லைன் சேவைகள்
பல முதலீட்டாளர்கள் தங்களுடைய மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளை நிர்வகிப்பதற்கு ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த சேவைகளில் அவர்கள் தங்களுடைய கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்ட்களை எளிதாக அணுக முடியும்.
உங்கள் ஸ்டேட்மெண்ட்டைப் பெறுவதற்கு:
> நீங்கள் தேர்வு செய்த ஆன்லைன் சேவையின் இணையதளம் அல்லது செயலியில் உள்நுழையவும்.
> “போர்ட்ஃபோலியோ” அல்லது “ரிப்போர்ட்டுகள்” பிரிவிற்குச் செல்லவும். “கேப்பிட்டல் கெயின் ஸ்டேட்மெண்ட்” என்று குறிப்பிடப்பட்டுள்ள விருப்பத்தைக் கண்டறியவும்.
> நீங்கள் விரும்பும் நிதி ஆண்டு அல்லது ஆண்டு வரம்பைத் தேர்வு செய்யவும்.
> தேர்வு செய்த பிறகு, கோப்பு ஒன்று உருவாக்கப்படும் அல்லது PDF வடிவில் ஸ்டேட்மெண்ட்டை நீங்கள் பதிவிறக்க முடியும்.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.