NAV-ஐக் கணக்கிட, நீங்கள் ஃபண்டின் லையபிலிட்டியை அதன் மொத்த அசெட் மதிப்பிலிருந்து கழித்து அந்த மதிப்பை ஃபண்டின் மொத்த அவுட் ஸ்டேன்டிங் யூனிட்டுகளால் வகுக்க வேண்டும்.
ஒரு அசெட்டின் நிகர மதிப்பு = (மொத்த அசெட் – மொத்த லையபிலிட்டிகள்) / ஃபண்டின் மொத்த அவுட் ஸ்டேண்டிங் யூனிட்டுகளின் எண்ணிக்கை
ஒரு எளிய உதாரணத்தைப் பயன்படுத்தி NAV கணக்கிடப்படும் விதத்தை நன்கு புரிந்துகொள்வோம்.
பின்வரும் விவரங்களுடன் ஒரு மியூச்சுவல் ஃபண்டு உள்ளது என்று வைத்துக்கொள்வோம்-
> போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளின் சந்தை மதிப்பு: 50 கோடி
> ரொக்கம்: 5 கோடி
> மொத்த லையபிலிட்டிகள்: 6 கோடி
> மொத்த அவுட்ஸ்டேன்டிங் யூனிட்டுகளின் எண்ணிக்கை: 10 லட்சம்
அடுத்து, ஃபார்முலாவைப் பயன்படுத்தி NAV-ஐக் கணக்கிடுவோம்:
ஒரு அசெட்டின் நிகர மதிப்பு = (மொத்த அசெட்* – மொத்த லையபிலிட்டிகள்) / ஃபண்டின் மொத்த அவுட் ஸ்டேன்டிங் யூனிட்டுகளின் எண்ணிக்கை
= (50,00,00,000+5,00,00,000−6,00,00,000)/ 10,00,000
= 490
*மொத்த அசெட்டுகள் = செக்யூரிட்டிகளின் சந்தை மதிப்பு + ரொக்கம் (50,00,00,000+5,00,00,000)
விளக்கம்
மியூச்சுவல் ஃபண்டின் NAV ₹490 ஆகும். அதாவது மியூச்சுவல் ஃபண்டின் ஒவ்வொரு யூனிட்டும் ₹490 மதிப்புடையது.
இந்தியாவில், NAV ஒவ்வொரு நாளின் முடிவிலும் கணக்கிடப்படுகிறது. இந்த மதிப்பு ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் உள்ள செக்யூரிட்டிகளின் இறுதி விலைகளைக் காட்டுகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவால் (SEBI) NAV-இன் கணக்கீடும் அறிவிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது.
பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.