மியூச்சுவல் ஃபண்டுகளை எப்படி ரிடீம் செய்வது?

மியூச்சுவல் ஃபண்ட்களை எப்படி ரிடீம்செய்வது? zoom-icon

முதலீட்டு உலகத்தில், நெகிழ்த்தன்மை என்பது முக்கியம். ஒரு முதலீட்டாளர் தனது மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் ஹோல்டிங்குகளை ரொக்கமாக மாற்ற விரும்பக்கூடிய நிலை வரலாம். முதலீட்டாளர் தனது தனிப்பட்ட அவசரப் பணத் தேவைகளுக்காக அல்லது வரி கிரெடிட், பணி ஒய்வு போன்றவற்றுக்காக தனது முதலீட்டு இலக்கை அடைவதன் காரணமாக தனது மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் ஹோல்டிங்குகளை விற்கத் தேர்வு செய்யலாம்.


மியூச்சுவல் ஃபண்ட்களை ரிடீம் செய்யும் முறைகள்
AMC(கள்) மற்றும் முதலீட்டாளரின் விருப்பத்தைப் பொறுத்து, மியூச்சுவல் ஃபண்ட்களை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் ரிடீம் செய்ய முடியும். இந்த இரண்டு முறைக்கும் குறிப்பிட்ட வழிமுறைகள் உள்ளன:


ஆஃப்லைனில் ரிடீம் செய்தல்: AMC/RTA/ஏஜென்ட்டுகள்/டிஸ்ட்ரிபியூட்டர்கள்
உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை ஆஃப்லைனில் ரிடீம் செய்ய, கையொப்பமிட்ட ரிடெம்ப்ஷன் கோரிக்கைப் படிவத்தை AMC அல்லது பதிவாளரின் உரிய அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். சரியாகக் கையொப்பமிடப்பட்ட ரிடெம்ப்ஷன் படிவத்தை ஏஜென்ட் அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் தனது மியூச்சுவல் ஃபண்ட்களை ரிடீம் செய்யவும் ஒரு முதலீட்டாளர் தேர்வு செய்யலாம், பிறகு அந்தப் படிவம் AMC அல்லது RTA அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவரின் பெயர், ஃபோலியோ எண், யூனிட்டுகளின் எண்ணிக்கை அல்லது ரிடெம்ப்ஷன் செய்ய வேண்டிய தொகை உள்ளிட்ட அத்தியாவசியமான விவரங்களை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும், பிறகு நீங்கள் ரிடெம்ப்ஷன் படிவத்தில் கையொப்பமிட வேண்டும். இந்தச் செயல்முறையை நிறைவு செய்ததும், உங்கள் வருவாய் நீங்கள் பதிவு செய்த வங்கிக் கணக்கில் அல்லது IFSC குறியீடு வழங்கப்படாமல் இருந்தால் ‘அக்கவுண்ட் பேயீ செக்’ (account payee cheque) மூலம் கிரெடிட் செய்யப்படும்


ஆன்லைன் ரிடெம்ப்ஷன்: AMC/RTA/Agents/Distributors/MFCentral மற்றும் /Trading/DEMAT கணக்கு வலைத்தளங்கள்
உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை ஆன்லைனில் ரிடீம் செய்ய, நீங்கள் விரும்பும் மியூச்சுவல் ஃபண்ட் / பதிவாளர் / MFD/அக்ரிகேட்டர் வலைத்தளம் அல்லது MF சென்ட்ரல் வலைத்தளத்தைப் பார்வையிடலாம். உங்கள் ஃபோலியோ எண் அல்லது PAN கார்டு எண் குறிப்பிட்ட வலைத்தளத்திற்கான உள்நுழைவுச் சான்றுகளைக் கொண்டு உள்நுழையவும். ஸ்கீமைத் தேர்ந்தெடுத்து யூனிட்டுகளின் எண்ணிக்கை அல்லது ரிடெம்ப்ஷன் தொகையைக் குறிப்பிடவும்.

டீமேட் கணக்கின் மூலம் ரிடீம் செய்தல்: ஆரம்பத்தில் நீங்கள் உங்களுடைய டீமேட் கணக்கின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்களை வாங்கியிருந்தால், அதே கணக்கைக் கொண்டே ரிடெம்ப்ஷன் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். நிறைவு செய்த பிறகு, ரிடெம்ப்ஷன் கோரிக்கைக்கான நடவடிக்கையாக எலக்ட்ரானிக் பேமெண்ட் செய்யப்படும், அதில் கிரெடிட் ஆகும் தொகை உங்கள் டீமேட் கணக்குடன் இணைந்துள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

கடைசியாக, குறிப்பிட்ட கால வரம்புக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்ட் ஹோல்டிங்குகளை ரிடீம் செய்யும்போது விதிக்கப்படும் வெளியேற்றக் கட்டணங்கள் போன்ற சாத்தியமுள்ள கட்டணங்களைப் பற்றியும் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஃபண்டின் வகை மற்றும் கால அளவைப் பொறுத்து வெளியேற்றக் கட்டணங்கள் மாறக்கூடும். ELSS போன்ற சில ஸ்கீம்கள் குறிப்பிட்ட லாக்-இன் கால வரம்பு கொண்டிருக்கும், அந்தக் குறிப்பிட்ட காலம் வரை அவற்றை ரிடீம் செய்ய முடியாது. கூடுதலாக, முதலீட்டுத் தொகை மற்றும் ஹோல்டிங் கால அளவினால் மாறக்கூடிய கேப்பிட்டல் கெயின்ஸ் வரிகள், ரிட்டர்ன்களை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்கக்கூடும். தகவலறிந்து தெளிவான முடிவுகளை எடுக்க, முதலீட்டாளர்கள் தங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை ரிடீம் செய்வதற்கு முன்பு வெளியேற்றக் கட்டணங்கள் மற்றும் வரி விளைவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.


பொறுப்புதுறப்பு
பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

285

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?