ஒரு திட்டத்தின் ரிஸ்கோமீட்டர் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

How is the Riskometer for a scheme is derived? zoom-icon

மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமில் அடங்கியுள்ள ‘ரிஸ்க்’ என்ன என்பது தொடர்பான முழு புரிதலை வழங்க, ரிஸ்க்-ஓ-மீட்டர் முயற்சி செய்யும். மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீம் அதன் கீழ் வைத்துள்ள ஒவ்வொரு அசெட் வகைக்கும் ரிஸ்க் ஸ்கோரை வழங்குவதன் மூலம் இதைச் செய்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோக்களில் உள்ள பணம், தங்கம், பிற நிதி இன்ஸ்ட்ருமென்ட்கள் போன்ற ஒவ்வொரு கடன் அல்லது ஈக்விட்டி இன்ஸ்ட்ருமென்ட்களுக்கும் ரிஸ்க் மதிப்பு கணக்கிடப்படும்.

ஈக்விட்டிகளைப் பொறுத்தவரை, போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒவ்வொரு நிலைக்கும், இந்த மூன்று பிரதான காரணிகள் அடிப்படையில் ரிஸ்க் ஸ்கோர் மதிப்பிடப்படும்:

  1. மார்க்கெட் கேபிட்டலைசேஷன்: ஸ்மால்-கேப் ஸ்டாக்குகள் மிட்-கேப் ஸ்டாக்குகளைவிட அதிக ரிஸ்க் கொண்டதாகும். எனவே அது லார்ஜ்-கேப் ஃபண்ட்களைவிட அதிக ரிஸ்க்கைக் கொண்டதாகும். ஒவ்வொன்றின் ரிஸ்க் மதிப்பும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும்.
  2. நிலையற்ற தன்மை: கணிசமான அளவில் தினசரி ஏற்ற இறக்கங்களைக் கொண்ட ஸ்டாக்குகள் அதிக ரிஸ்க் மதிப்பின் கீழ் வரும். இது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்டாக்கின் விலையில் ஏற்பட்ட மாற்றங்களைப் பொறுத்து கணக்கிடப்படும்.
  3. இம்பேக்ட் விலை (லிக்விடிட்டி)1: குறைந்த அளவிலான டிரேடிங் வால்யூம்களை எதிர்கொள்ளும் ஸ்டாக்குகள் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளில் கணிசமான விலை மாறுபாடுகளுக்கு உட்படும். இதனால் இம்பேக்ட் விலை அதிகரிப்பதுடன், அதனுடன் தொடர்புடைய ரிஸ்க் மதிப்பும் அதிகரிக்கும். இந்த ரிஸ்க் மதிப்பானது, தற்போதைய மாதம் உட்பட கடைசி மூன்று மாதங்களின் சராசரி இம்பேக்ட் விலையைப் பொறுத்து அமையும்.

டெப்ட் செக்யூரிட்டிகளுக்கு, பின்வரும் காரணிகள் அடிப்படையில் ரிஸ்க் மதிப்பிடப்படும்:

  1. கிரெடிட் ரிஸ்க்: அதிக கிரெடிட் ரேட்டிங்குகளுக்கு (உதாரணம்2: AAA/G-Sec/SDL/TREPS) ரிஸ்க் மதிப்பு குறைவாக இருக்கும், அதே வேளையில் முதலீட்டு கிரேடுக்குக் குறைவான ரேட்டிங்குகள் கொண்ட செக்யூரிட்டிகளுக்கு ரிஸ்க் மதிப்பு அதிகமாக இருக்கும். ரேட்டிங் வழங்கப்படாத மற்றும் முதலீட்டு கிரேடுக்குக் கீழ் உள்ள செக்யூரிட்டிகளில் டிஃபால்ட் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இந்த ரிஸ்க் மாற்றம் நிகழ்கிறது.
  2. வட்டிவிகிதம் தொடர்பான ரிஸ்க்: போர்ட்ஃபோலியோவின் மெக்காலே கால அளவைப் பொறுத்து இந்த ரிஸ்க் தீர்மானிக்கப்படுகிறது. அதிகளவிலான முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட பாண்டுகளில் அதிக ரிஸ்க் இருக்கும். இவை வட்டிவிகிதங்கள் அடிப்படையில் அதிக ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுவது இதற்குக் காரணமாகும்.
  3. லிக்விடிட்டி ரிஸ்க்3: லிக்விடிட்டி ரிஸ்க் மதிப்பீடானது லிஸ்டிங் நிலை, கிரெடிட் ரேட்டிங், டெப்ட் இன்ஸ்ட்ருமென்ட்டின் கட்டமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

இவற்றுடன், பணம் & தற்போதைய ஒட்டுமொத்த அசெட்கள், டிரைவேட்டிவ்கள், தங்கம், ஃபாரின் செக்யூரிட்டிகள், REITs, InvITs போன்ற பல பிற அசெட் வகைகளுக்கான ரிஸ்க்கை மதிப்பிட SEBI விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒவ்வொரு அசெட்டின் ரிஸ்க் மதிப்பின் சராசரியைக் கணக்கிட்டு மொத்த ரிஸ்க் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது.

கடைசியாக, ஃபண்ட் ஸ்கீமானது ரிஸ்க்-ஓ-மீட்டரில் குறிப்பிட்ட ரிஸ்க் வகையின் கீழ் (குறைவு, ஓரளவு குறைவு, ஓரளவு அதிகம் அல்லது அதிகம்) வகைப்படுத்தப்படும்

ரிஸ்க் லேபிள் ஃபண்டின் சராசரி ரிஸ்க் ஸ்கோர்
குறைவு 1
குறைவு முதல் மிதமானது 2
மிதமானது 3
ஓரளவு அதிகம் 4
அதிகம் 5
மிக அதிகம் 6 மற்றும் பல

ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமிற்கான ரிஸ்க்-ஓ-மீட்டரானது மாதாந்திர அடிப்படையில் மதிப்பிடப்படும் என்பதைக் கவனத்தில்கொள்வது முக்கியமாகும். ஒவ்வொரு மாதம் முடிந்து பத்து நாட்களுக்குள், புதுப்பிக்கப்பட்ட ரிஸ்க்-ஓ-மீட்டர் மற்றும் போர்ட்ஃபோலியோ தகவல்களை மியூச்சுவல் ஃபண்ட்/AMCகள் அவற்றின் இனையதளத்திலும் AMFI இணையதளத்திலும் காட்டும்.

1. பெரிய பர்சேஸ் அல்லது விற்பனை நடக்கும்போது ஸ்டாக்கின் விலை எந்தளவு உயரும் என்பதைப் பொறுத்து இம்பேக்ட் விலை இருக்கும்.
2. கடன் வாங்குபவர் தவணைத் தொகையைச் செலுத்தாமல் போவதற்கான சாத்தியங்களை கிரெடிட் ஸ்கோர் குறிக்கும்.
3. . லிக்விடிட்டி ரிஸ்க் என்பது மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்து, முதிர்ச்சி அடையும் தேதிக்கு முன்பே பாண்டை விற்பதற்கான சாத்தியத்தைக் குறிக்கும்.

பொறுப்புதுறப்பு

பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் சம்பந்தமான எல்லா ஆவணங்களையும் கவனமாக வாசிக்கவும்.

344

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?