நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யும் முன்பு, சரியான மியூச்சுவல் ஃபண்ட் ஸ்கீமைத் தேர்ந்தெடுப்பதற்காக நீங்கள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். பொதுவாக முதலீடு செய்பவர்கள், ஸ்கீம் வகைகளின் படி ஆய்வு செய்வார்கள், பிறகு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் சிறப்பாகச் செயல்படும் ஸ்கீம்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இப்படிச் செய்கையில் அவர்கள் அந்த ஸ்கீம்களின் ரிஸ்க்கைக் காட்டும் அடையாளங்களை கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஸ்கீம்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒப்பிடும்போது, அவற்றின் ரிஸ்க்கையும் ஒப்பிடத் தவறாதீர்கள். ஒவ்வொரு ஸ்கீமின் ஃபேக்ட் ஷீட்டிலும் திட்ட விலக்கம், பீட்டா மற்றும் ஷார்பே ரேஷியோ போன்ற முக்கியமான ரிஸ்க் தகவல்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் பிராடக்ட் லேபிள் தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. அந்த லேபிளில் இருக்கும் ரிஸ்கோமீட்டர் அந்த ஃபண்டில் உள்ள ரிஸ்க்கின் அளவைக் காட்டும். இந்த ரிஸ்கோமீட்டரை SEBI கட்டாயமாக்கியுள்ளது, இது ஒரு ஃபண்டில் உள்ள ரிஸ்க்கைக் குறிக்கிறது. ரிஸ்க்கில் குறைவு, குறைவு முதல் மிதமானது வரை, மிதமானது, மிதமாக அதிகம், அதிகம், மிக அதிகம் ஆகிய ஆறு நிலைகள் உள்ளன. இவை தமது போர்ட்ஃபோலியோவில் உள்ள ரிஸ்க்கின் அளவின் அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டின் பல்வேறு வகைகளுடன் தொடர்புப்படுத்தப்படுகின்றன. இந்த வகையான ரிஸ்க்கை வகைப்படுத்தும் முறையை SEBI வரையறுத்துள்ளது என்பதால், எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களுமே அதே வகையான ஃபண்ட்களை சரியாக ஒரே வகையின் கீழ் வகைப்படுத்தி வைக்க வேண்டியது கட்டாயமாகும்.
ஃபண்டின் ரிஸ்க் பற்றிய ஒரு மேலோட்டப் பார்வையை வழங்கும் ரிஸ்க்கோமீட்டர் மட்டுமின்றி, ஃபேக்ட்ஷீட்டில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட ரிஸ்க் இண்டிகேட்டர்களையும் ஒருவர் ஆராய்ந்து பார்க்கலாம். ஒரு ஃபண்டின் ரிட்டர்ன் எவ்வளவு வரம்பைக் கொண்டிருக்கும் என்பதை திட்ட விலக்கம் அளவிடுகிறது. ஒரு ஸ்கீமில் கிடைக்கும் ரிட்டர்னின் திட்டவிலக்கம் அதிகமாக இருந்தால், அதன் செயல்திறன் பரந்துபட்டதாக உள்ளது என்று பொருள். அதாவது எளிதில் ஏறி இறங்கக் கூடும் என்று புரிந்துகொள்ளலாம்.
பீட்டா என்பது, மார்க்கெட்டைப் பொறுத்து ஒரு ஃபண்டின் எளிதில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் தன்மையை அளவிடுகிறது. பீட்டா 1-க்கு மேல் இருந்தால் (>1 ), ஸ்கீமானது மார்க்கெட்டைவிட அதிகமாக எளிதில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் தன்மை கொண்டுள்ளது என்றும், 1-க்குக் குறைவாக இருந்தால் (<1) ஸ்கீமானது மார்க்கெட்டைவிடக் குறைவாக எளிதில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் தன்மை கொண்டுள்ளது என்றும் பொருள். பீட்டா மதிப்பு 1 என இருந்தால், மார்க்கெட்டின் எளிதில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் தன்மையும் ஸ்கீமின் எளிதில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படும் தன்மையும் ஒன்றேபோல உள்ளது என்று பொருள்.
ஷார்ப்பே விகிதம் என்பது, எடுக்கப்படும் ஒரு யூனிட் ரிஸ்க்கிற்கு ஒரு ஃபண்ட் எவ்வளவு கூடுதல் ரிட்டர்னை அளிக்கிறது என்பதை அளவிடுகிறது. இது ரிஸ்க்கிற்கு ஏற்ப சரிசெய்துகொள்ளும் ரிட்டர்னின் சிறந்த இண்டிகேட்டர் ஆகும்.
எந்த ஸ்கீமில் முதலீடு செய்வது என்று நீங்கள் ஆராய்ச்சி செய்யும் போது, மேலே குறிப்பிட்ட ரிஸ்க் அளவீடுகளை மதிப்பீடு செய்து பார்க்க மறக்காதீர்கள்.