SIP யில் முதலீடு செய்வதா அல்லது ஒட்டுமொத்தத் தொகையாக முதலீடு செய்வதா? இது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மீதான உங்கள் பரிச்சயத்தையும், நீங்கள் முதலீடு செய்ய விரும்புகின்ற ஃபண்டையும், உங்கள் இலக்கையும் சார்ந்தது. ஓர் இலக்குக்கான போதுமான மூலதனத்தை சேர்ப்பதற்காக வழக்கமான முறையில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், SIP மூலம் பொருத்தமான ஒரு ஈக்விட்டி திட்டத்தில் முதலீடு செய்திடுங்கள். அதேபோன்று, உங்கள் மாதாந்திர வருமானத்தில் இருந்து சேமிக்க விரும்பினால், கணிசமான அளவில் உங்கள் பணத்தைப் பெருக்கக் கூடிய ஒரு திட்டத்தில் அதை முதலீடு செய்திடுங்கள். இதன்மூலம், நீண்டகாலத்தில் உங்கள் குழந்தையின் உயர் கல்விக்கு நிதி சேர்த்திட அது போதுமானதாக இருக்கும். தேவைப்பட்டால் நிதி நிபுணரின் உதவியை பெறுங்கள்.
உங்களிடம் தற்போது போனஸ், சொத்து விற்பனையில் இருந்து பெறப்பட்ட பணம் அல்லது ஓய்வுகாலத் தொகை போன்ற அதிகப்படியான தொகை இருந்து, அதை என்ன செய்வது என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், டெப்ட் அல்லது லிக்விட் ஃபண்ட்களில் ஒட்டுமொத்தத் தொகையாக அதனை முதலீடு செய்திடுங்கள். ஈக்விட்டி சார்ந்த திட்டங்களுக்கு SIP களில் முதலீடு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அதேசமயம், ஒட்டுமொத்தத் தொகை முதலீடுகளுக்கு, டெப்ட் ஃபண்ட்கள் பொருத்தமானவை. நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் புதிதாக முதலீடு செய்கிறீர்கள் என்றால், SIP உங்களுக்கு ஏற்றது. SIP -யில் இருந்து பலனைப் பெற, நீண்டகாலம் முதலீட்டைத் தக்க வைக்க வேண்டியது அவசியமானது. சந்தை ஏறுமுகமாக இருந்து, அது தொடர்ந்து அதிகரிக்கும் என்று நீங்கள் கருதினால் ஒட்டுமொத்தத் தொகையை முதலீடு செய்யலாம். பரந்த அளவில் ஏற்ற இறக்கம் கொண்ட சந்தைக்கு SIP ஏற்றது.