உங்களின் முதல் விமானப் பயணம் நினைவில் உள்ளதா? உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு அல்லது குமட்டுவது போன்ற உணர்வு இருந்ததா? இறுதியாக, விமானம் வானில் பறந்து சென்ற பின்பு, உங்களுக்கு தைரியம் வந்தது, இல்லையா? 30,000 அடி உயரத்தில், சீட் பெல்ட் கட்டப்பட்ட நிலையில், பைலட்டுடன் கூடிய அக்கறையான கேபின் ஊழியர்களுடன் நீங்கள் பறக்கிறீர்கள்.
ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்வதும் முதல் விமானப் பயணம் போன்றதுதான். தொடக்கத்தில் நீங்கள் உங்கள் பணம் எங்கு செல்லும் என்பது குறித்து கவலை கொண்டாலும், சரியான பெறுனரை அடைந்தால், பிற முறைகளைப் போன்று ஆன்லைன் முதலீட்டு முறைகளும் பாதுகாப்பானதுதான்.
மேலும் வாசிக்க