ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள், பங்குகளை வாங்குகின்றன. கடன் ஃபண்ட்கள், தங்களின் போர்ட்ஃபோலியோவுக்காக கடன் செக்யூரிட்டிகளை வாங்குகின்றன. மின்சக்தி நிறுவனங்கள், வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் போன்றவை பாண்டுகள் போன்ற செக்யூரிட்டிகளை வழங்குகின்றன. புதிய திட்டங்களுக்காக கடன்களைப் பெறுவதற்குப் பதிலாக, பொதுமக்களிடம் (முதலீட்டாளர்கள்) இருந்து பணத்தைத் திரட்டுவதற்காக, நிலையான வட்டி வீதம் கொண்ட பாண்டுகளை அவை வழங்கிடும். பாண்டுகள் என்பவை, அவற்றை வாங்கும் நபர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட கால அளவில் நிலையான வட்டியை வழங்குவதற்கான வாக்குறுதியாகும்.
முதலீட்டாளர்கள், சில ஆண்டுகளில் முதிர்வடையும் பாண்டுகளை வாங்கும்போது, அவர்கள் தங்களது பணத்தை அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கு வழங்குனருக்கு (உதாரணத்திற்கு, ABC பவர் லிமிடெட்) கடன் தருகின்றனர். இந்தக் காலகட்டத்தில், தங்களது பாண்டுகளில் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு (=ABCக்கு கடனாகக் கொடுக்கப்பட்ட பணத்துக்கு) பிரதிபலனாக குறிப்பிட்ட கால இடைவெளியில், வட்டியை வழங்குவதாக முதலீட்டாளர்களுக்கு ABC வாக்குறுதியளித்திடும். வீட்டுக் கடனை வாங்கும் ஒரு வாடிக்கையாளர் போன்ற கடனாளிதான் இந்த ABC நிறுவனமும். வீட்டுக் கடன் வாடிக்கையாளருக்கு, வங்கி கடன் அளிப்பதைப் போன்று, ABC நிறுவனத்துக்கு இந்த முதலீட்டாளர் (உங்கள் பணத்தை முதலீடு செய்கின்ற மியூச்சுவல் ஃபண்ட்) கடனளிப்பவராக இருப்பார்.
டெப்ட் ஃபண்ட்கள் , உங்கள் பணத்தை பல்வேறு பாண்டுகள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் பிற கடன் ஃபண்ட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும்.