ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் ஏற்படும் செலவுகள் என்னென்ன?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தால் ஏற்படும் செலவுகள் என்னென்ன? zoom-icon

முதலீட்டாளர் தனது நிதி இலக்குகளை அடைவதற்கு உதவும் வகையில், பல்வேறு சேவைகளை வழங்கக்கூடிய பல அம்சங்கள் இதில் அடங்கியுள்ளன.

வழங்கப்படும் சேவைகளுக்காக இந்த அனைத்து அம்சங்களுக்குமே கட்டணம் வழங்கத் தேவையுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தின் செலவுக்கும் திட்டத்தின் கார்பஸில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டணமாக விதிக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதற்கு SEBI ஒழுங்குமுறைகள் உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அந்தச் செலவுகள் அதிகமாக இருந்தாலும் கூட கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. SEBI ஒழுங்குமுறைகளின்படி, ஃபண்ட்டானது பெருகப் பெருக, நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்களின் (AUM) குறிப்பிட்ட சதவீதத்தில் கணக்கிடப்படும் அதிகபட்ச செலவுகள் குறைந்திடும்.

நீங்கள் முதலீடு செய்யக் கருதுகின்ற ஒவ்வொரு திட்டத்துக்கும் அனுமதிக்கப்படுகின்ற அதிகபட்ச செலவு விகிதமானது வழங்கல் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். திட்டத்தின் மூலம் வசூலிக்கப்படும் உண்மையான செலவுகளை, மாதாந்திர அறிக்கை மற்றும் கட்டாய அரையாண்டு வெளிப்படுத்தல்களில் நீங்கள் காணலாம்.

343

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சரியானதா?