"எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் ஒரே மாதிரியானவை இல்லையா? இது வெறும் மியூச்சுவல் ஃபண்ட்தான், இல்லையா?" இந்தக் கேள்விகளை கோகுல் கேட்கிறார். மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தராக இருக்கும் அவரின் நண்பர் ஹரிஷ், புன்னகைக்கிறார். பலரும் இந்தக் கருத்துக்களைச் சொல்வது அவருக்குப் பரிச்சயமானதுதான்.
எல்லா மியூச்சுவல் ஃபண்ட்களும் ஒன்றே என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது. பல்வேறு வகையான ஃபண்ட்கள் உள்ளன. அவற்றில் ஈக்விட்டி ஃபண்ட்களும், டெப்ட் ஃபண்ட்களும் முக்கியமானவையாக உள்ளன. இவற்றிற்கு இடையேயான வித்தியாசம் என்பது, எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதை பொருத்தது. டெப்ட் ஃபண்ட்கள் என்பது நிலையான வருவாய் தரும் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்கிறது. அதேசமயம், ஈக்விட்டி ஃபண்ட்கள், பெருமளவில் ஈக்விட்டி பங்குகள் மற்றும் அவை தொடர்பான செக்யூரிட்டிகளில் முதலீடு செய்திடும். ஈக்விட்டி மற்றும் நிலையான வருவாய் தரும் செக்யூரிட்டிகள் இரண்டுமே தனிப்பட்ட பண்புகள் கொண்டவை.
வெவ்வேறு முதலீட்டாளர்களுக்கு வெவ்வேறு தேவைகள் இருக்கும். சிலர், தங்களின் இலக்குகளை அடைவதற்கு அதிக ரிட்டர்ன்களை எதிர்பார்த்திடுவர், அதேசமயத்தில் சிலர், அதிக அபாயங்களை எதிர்கொள்ளத் தயங்கிடுவர். சில முதலீட்டாளர்களுக்கு நீண்டகால இலக்கு இருக்கும். சிலரோ குறுகிய கால இலக்குகளைக் கொண்டிருப்பர். முதலீட்டாளர்கள் நீண்டகால இலக்குகளுக்கு, ஈக்விட்டி ஃபண்டையும், குறுகிய காலம் முதல் நடுத்தர கால அளவிலான இலக்குகளுக்கு டெப்ட் ஃபண்ட்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஈக்விட்டி ஃபண்ட்களுக்கு, அதிக ரிட்டர்ன்களை வழங்கக்கூடிய சாத்தியம் இருந்தாலும், அபாயம் அதிகம். அதேசமயம், டெப்ட் ஃபண்ட்கள், ஒப்பீட்டளவில் நிலையான மற்றும் நடுத்தரம் முதல் குறைந்த அளவிலான ரிட்டர்ன்களை வழங்கக்கூடியது.