ஒரு கேளிக்கை பூங்கா குறித்து சிந்தித்துப் பார்க்கும் போது, ரோலர் கோஸ்டர் அல்லது டாய் டிரெயின் உங்கள் மனதில் தோன்றுகிறதா? அனேகமாக ரோலர் கோஸ்டர் உங்கள் நினைவுக்கு வந்திடும். கேளிக்கை பூங்காக்களில் இதுபோன்ற ரைடுகள் பெரிய அளவில் நம்மைக் கவர்ந்திழுத்திடும். மேலும் அவை கேளிக்கை பூங்காக்கள் குறித்த ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தையும் ஏற்படுத்திடும். இதேபோன்றுதான் ‘மியூச்சுவல் ஃபண்ட்ஸும்’ பங்குகளில் மட்டுமே முதலீடு செய்திடும், அதனால் அபாயம் நிறைந்தது என்ற கண்ணோட்டம் நிலவுகிறது. மக்களின் பல்வேறு முதலீட்டுத் தேவைகளுக்காக வடிவமைக்கப்பட்ட பல வகையான மியூச்சுவல் ஃபண்ட்கள் உள்ளன. சில முதலீட்டாளர்கள் பங்குகளில் இருந்து மட்டுமே கிடைக்க சாத்தியமுள்ள அதிக ரிட்டர்ன்களை எதிர்பார்க்கின்றனர். இத்தகைய முதலீட்டாளர்கள் ஈக்விட்டி ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்களின் இதுபோன்ற நோக்கங்களை பூர்த்தி செய்யும் சாத்தியமுள்ள சிறந்த நீண்டகால முதலீட்டுத் தேர்வுகளில் ஒன்றாக இவை உள்ளன. ஆனால், இந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் அதிக ஏற்ற இறக்கம் கொண்டவையாக இருக்கும்; ஏனென்றால் அவை பல்வேறு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும்.
சில மியூச்சுவல் ஃபண்ட்கள் ஈக்விட்டியில் முதலீட்டைச் செய்யாமல், வங்கிகள், நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகளின் மூலம் வழங்கப்படும் பாண்டுகள் மற்றும் பணச் சந்தை சார்ந்த ஆவணங்கள் (வங்கி CD, டிரஷரி பில்கள், கமர்ஷியல் பேப்பர்) போன்றவற்றில் முதலீடு செய்கின்றன. இவற்றின் அபாயம் குறைவாக இருக்கும். ஆனால், ஈக்விட்டி ஃபண்ட்களுடன் ஒப்பிடும் போது குறைந்த ரிட்டர்ன்களையே வழங்கிடும். வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட்கள் அல்லது PPF போன்ற வழக்கமான தேர்வுகளுக்கு இந்த ஃபண்டுகள் ஒரு சிறந்த மாற்றாக இருக்கும். எனவே, வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் FD -ஐ விட சிறந்த ரிட்டர்ன்களை தருவதிலும் மற்றும் சிறந்த வரிப் பலனை அளிப்பதிலும் உங்கள் தொகையை முதலீடு செய்ய விரும்பினால், இதுபோன்ற நிதி இலக்குகளுக்கு டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சிறந்தவை.
மியூச்சுவல் ஃபண்டுகள் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்கிறதா?
343