மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள் (PMS) இரண்டிலுமே, முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை, தொழில்முறை ஃபண்ட் மேனேஜர்களின் மூலம், நிர்வகிக்கப்படும் ஒரு முதலீட்டுத் தொகுப்பின் மூலம் பங்குகள் மற்றும் பாண்டுகளில் முதலீடு செய்வர். அவை இரண்டுமே மாறுபட்ட நோக்கங்களுக்கானவை என்பதுடன் இரண்டு மாறுபட்ட முதலீட்டுத் தேர்வுகள் கொண்டவை. மேலும் இரண்டு மாறுபட்ட வகையான முதலீட்டாளர்களுக்கானவை.
மியூச்சுவல் ஃபண்ட்ஸில் முதலீடு செய்ய விரும்பும் எந்தவொருவரும் மாதம் ரூ.500/- குறைந்தபட்சத் தொகையில் இருந்து முதலீட்டைத் தொடங்க முடியும். ஆனால் PMS திட்டங்களில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் ரூ.25 இலட்சம் முதலீடு செய்யவேண்டும். ஏனென்றால், அவை முக்கியமாக HNI நபர்களை இலக்காகக் கொண்ட சொத்து மேலாண்மைத் திட்டங்கள் ஆகும்.SEBI அமைப்பின் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. ஆனால், PMS திட்டங்களுக்கு கடுமையான வெளிப்படுத்தல் விதிமுறைகள் ஏதும் கிடையாது.மேலும், இந்த PMS, ரிஸ்க்குகளை புரிந்துகொள்ளக் கூடிய மேம்பட்ட நிலையில் உள்ள முதலீட்டாளர்களுக்கானது. ஏனென்றால், சந்தையில் எளிதில் வர்த்தகம் செய்யப்படாத செக்யூரிட்டிகளில் PMS ஃபண்ட்கள் முதலீடு செய்கின்றன.மியூச்சுவல் ஃபண்ட்கள், லிக்விட் செக்யூரிட்டிகளில் முதலீடு செய்யும்.PMS-உ டன் ஒப்பிடும் போது, மியூச்சுவல் ஃபண்ட்ஸ், பரவலாக்கப்பட்ட போர்ட்ஃபோலியோ காரணமாக குறைந்த ரிஸ்க் கொண்டவையாக உள்ளன.PMS வழக்கமாக, 20-30 ஸ்டாக்குகளின் போர்ட்ஃபோலியோவில் ஒருமுகப்படுத்தப்பட்டு இருக்கும்.இதனால், அதன் செயல்திறனானது முழுமையாக ஃபண்ட் மேனேஜரின் பங்கு தேர்ந்தெடுப்பு திறனைச் சார்ந்து இருக்கும்.
உயர் ஃபண்ட் மேலாண்மைக் கட்டணத்தைத் தவிர, PMS ஃபண்ட்கள், அதிக நுழைவு மற்றும் வெளியேற்றக் கட்டணங்களைக் கொண்டிருக்கின்றன.மியூச்சுவல் ஃபண்ட்ஸில் நுழைவுக் கட்டணம் கிடையாது மற்றும் வெளியேற்றக் கட்டணமும் குறைவு.ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்கள் பொருத்தமானவை. அதேசமயத்தில், ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு PMS ஃபண்ட்கள் உகந்ததல்ல.